BBC வரும் 20.12.2024 க்குள் ஆணையை அமல்படுத்தாவிட்டால் இரண்டு நாட்கள் கறிக்கோழிகளை விற்பனை நிறுத்தம்: தமிழ்நாடு கோழி வணிகர்களின் கூட்டமைப்பு தீர்மானம்…!
திருச்சி மத்திய பேருந்து நிலையம் அருகில் உள்ள தனியார் ஹோட்டலில் நடைபெற்ற தமிழ்நாடு கோழி வணிகர்களின் கூட்டமைப்பு சார்பில் வருடாந்திர பொதுக் குழு கூட்டம் மாநிலத் தலைவர் பொ.துரைராஜ் தலைமையில் நடைபெற்றது. மாநில செயலாளர் எம். சுந்தரலிங்கம், பொருளாளர் ஜான் கென்னடி முன்னிலை வகித்தனர். தமிழ்நாடு முழுவதும் உள்ள நிர்வாகிகள், கலந்து கொண்டு தங்களது கருத்துகளை பதிவு செய்தனர்.
இந்நிகழ்வில் நமது கூட்டமைப்பின் நீண்ட கால கோரிக்கையான 8-12 மணி நேர தீவன கட்டுப்பாட்டினை சுற்றுசூழல் பாதுகாப்பு, தொழிலாளர் நலன் மற்றும் பொது மக்களுக்கு பாதுகாப்பான கோழி இறைச்சினை உறுதிப்படுத்தும் விதமாக ஆணை பிறப்பித்து கொடுத்த தமிழக முதல்வர், கால்நடைத்துறை அமைச்சர் மற்றும் துணை சார்ந்த அதிகாரிகளுக்கு நன்றி தெரிவித்துக் கொள்வது, மகாவீர் ஜெயந்தி, மகாவீர் நிர்வான்டே, திருவள்ளுவர் தினம் மற்றும் வள்ளலார் தினம் போன்ற நாட்களில் ஆலயங்களுக்கு அருகில் உள்ள 100 மீட்டர் தொலைவில் மட்டும் இறைச்சி விற்பனை செய்யக்கூடாது என்ற நடைமுறையை தமிழ்நாடு முழுவதும் விரிவாக்கி கொடுத்து பொதுமக்களின் உணவு உரிமையை மற்றும் விவசாயிகள் வியாபாரிகளின் வாழ்வாதாரத்தையும் பாதுகாக்க ஆவணம் செய்து தருமாறும் கேட்டுகொள்கிறோம்.
மேலும் 18.10.2024 அன்று அரசு அறிவித்த 8-12 மணி நேர தீவன கட்டுப்பாடு ஆணையை கறிக்கோழி ஒருங்கிணைப்பு குழு இன்று வரை நடைமுறைப்படுத்தாமல் புறக்கணித்து வரும் நிலையில் BBC வரும்20.12.2024க்குள் இந்த ஆணையை அமல்படுத்தாவிட்டால் 21.12.2024 மற்றும் 22.12.2024 ஆகிய நாட்களில் வியாபாரிகள் கறிக்கோழிகளை விற்பனை செய்வதை நிறுத்தி தமிழ்நாடு முழுவதும் நிறுத்தி தங்களின் எதிர்ப்பை பதிவு செய்து, தமிழ்நாடு அரசின் கவனத்திற்கு கொண்டு செல்வோம் என்று அனைவரும் முன்னிலையில் தீர்மானங்கள் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டன. இந்நிகழ்ச்சியில் தமிழ்நாடு முழுவதும் நிர்வாகிகள் மற்றும் உறுப்பினர்கள் பலர் கலந்து கொண்டனர்.