திருச்சி மாவட்டத்தில் தொடர் மழை காரணமாக கிராப்பட்டி பகுதியில் மழை நீர் சூழ்ந்துள்ள பகுதிகளை நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே.என்.நேரு நேரில் தற்போது பார்வையிட்டு ஆய்வு செய்தார்.இந்த ஆய்வின்போது மாவட்ட ஆட்சித் தலைவர் பிரதீப் குமார், மாநகர மேயர் அன்பழகன், மாநகராட்சி ஆணையர் சரவணன், நகரப் பொறியாளர் சிவவாதம், மாமன்ற உறுப்பினர்கள் கவிதா செல்வம், கிராப்பட்டி செல்வம் உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.