தமிழ்நாடு முழுவதும் 1000 இடங்களில் நாம் தமிழர் கட்சி சார்பில் உறுப்பினர் சேர்க்கை முகாம்கள்: நாதக  ஒருங்கிணைப்பாளர் சீமான் அறிவிப்பு! 

- Advertisement -

0

வருகிற 29ம் தேதி தமிழ்நாடு முழுவதும் 1000 இடங்களில் நாம் தமிழர் கட்சி சார்பில் உறுப்பினர் சேர்க்கை முகாம்கள் நடைபெறும் என அக்கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார்.நாம் தமிழர் கட்சியின் இளைஞர் பாசறையோடு, மகளிர் மற்றும் மாணவர் பாசறை இணைந்து,வரும்29-12-2024 (ஞாயிறு) தமிழ்நாடு முழுமைக்கும் ஒரே நாளில் 1000இடங்களில் உறுப்பினர் சேர்க்கை முகாம்களை நடத்த திட்டமிடப்பட்டிருக்கிறது. அதன்படி, ஒரு கட்சி மாவட்டத்திற்கு (ஒரு சட்டமன்றத் தொகுதிக்கு) குறைந்தது 5 இடங்களிலாவது உறுப்பினர் சேர்க்கை முகாம்களை நடத்த வேண்டியது கட்டாயமாகிறது. எதிர்வரும் 2026ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலை வலிமையாக எதிர்கொள்ளவும், கட்சியின் உட்கட்டமைப்பை இன்னும் விரிவாக்கவுமாக இச்செயல்பாடு முன்னெடுக்கப் படுகிறது.

- Advertisement -

அதனைப் பேரெழுச்சியாக நடத்தி முடிக்க கட்சியின் மாநில, மண்டல, மாவட்ட, தொகுதி உள்ளிட்ட அனைத்துநிலைப் பொறுப்பாளர்களும், அனைத்துப் பாசறைகளின் அனைத்துநிலைப் பொறுப்பாளர்களும், நாம் தமிழர் உறவுகளும் அணியமாகுமாறு கேட்டுக் கொள்கிறேன்.கட்சி மாவட்டத்திற்கு விதிக்கப்பட்டிருக்கும் குறைந்தபட்ச இலக்கான ஐந்து இடங்களில் உறுப்பினர் சேர்க்கை முகாம்களை நடத்துவதென்றால், அந்த ஐந்து இடங்கள் எவை எவை என்பதுக் குறித்து அனைத்துநிலைப் பொறுப்பாளர்களும் கலந்தாய்வு செய்து தலைமைக்குத் தெரிவிக்குமாறும் கேட்டுக்கொள்கிறேன்.ஒன்று பத்தாவோம்!  பத்து நூறாவோம்! பகைவர் நடுங்கும் படையாவோம்! துளித் துளியாய் இணைவோம்! பெருங்கடலாகும் கனவோடு! 2026! படைப்போம் புதிய அரசியல் வரலாறு என குறிப்பிட்டுள்ளார்.

Leave A Reply

Your email address will not be published.