பூலோக வைகுண்டம் என்று பக்தர்களால் அன்பாக அழைக்கப்படும் ஸ்ரீரங்கம் அரங்கநாதர் கோவிலுக்கு பல கோடி மதிப்புள்ள வைர கிரீடத்தை பரதநாட்டிய கலைஞரான ஜாகிர் உசேன் காணிக்கையாக வழங்கியுள்ளார். அரை அடி உயரம் கொண்ட 400 கிராம் தங்கத்திலான 3160 கேரட் உள்ள விலை மதிப்பு கொண்ட ஒற்றை மாணிக்க கல் பதிக்கப்பட்டு உள்ளது. மேலும் கிரீடம் முழுவதும் 600 வைரக்கற்கள் மற்றும் மரகத கற்கள் கொண்ட அழகிய கலைநயத்துடன் பதிக்கப்பட்டுள்ளது. இந்தக் குருவி கிரீடத்தை பரதநாட்டிய கலைஞர் ஜாகிர் உசேன் ஸ்ரீரங்கம் கோவில் இணை ஆணையர் மாரியப்பனிடம் வழங்கினார். அர்ச்சகர் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.