நாடாளுமன்ற மாநிலங்கள் அவையில் எழுப்பப்பட்ட ஒரு கேள்விக்கு மத்திய சுகாதாரத்துறை இணை மந்திரி அனுப்ரியா பட்டேல் பதில் வழங்கினார். அவர் எழுத்துப்பூர்வமாக வழங்கிய அந்த பதிலில் கூறப்பட்டிருப்பதாவது, இந்துஸ்தான் ஆண்டிபயாடிக் நிறுவனம், கர்நாடகா ஆண்டிபயாடிக் மற்றும் பார்மாசூட்டிக்கல்ஸ் நிறுவனம் போன்றவைகள் பாராசூட்மல் மாத்திரைகளை தயாரிக்கிறது.
ஆனால் இதில் மெட்ரானிடசோல் 400 மிகி, பாராசிட்டமால் 500 மிகி மாத்திரைகள் போன்றவைகள் தரமானதாக இல்லை என்பது ஆய்வில் தெரியவந்துள்ளது. மேலும் இது தொடர்பாக உரிய முறையில் விசாரணை நடத்தப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே பாராசிட்டல் ஆன்டிபயாட்டிக் மாத்திரைகளில் தரமில்லை என்று மத்திய அரசு கூறியிருந்த நிலையில் தற்போது அதனை நாடாளுமன்றத்தில் எழுப்பப்பட்ட ஒரு கேள்விகளும் உறுதிப்படுத்தி உள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.