டிவி சீரியல்களை தணிக்கை செய்து வெளியிடக் கோரிய வழக்கு! உயர்நீதிமன்ற கிளை முக்கிய உத்தரவு!

- Advertisement -

0

தொலைக்காட்சி நாடகங்களில் (சீரியல்களில்) ஆபாச காட்சிகள் அதிமாக வருவதால், அவற்றை தணிக்கை செய்து வெளியிடும்படி, உத்தரவு பிறப்பிக்க வேண்டும் என உயர் நீதிமன்ற மதுரை அமர்வில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.மதுரைச் சேர்ந்த ரமேஷ் தாக்கல் செய்த மனுவில், “தற்போது ஒளிபரப்பப்படும் சீரியல்கள் எவ்விதமான தணிக்கைக்கும் உட்படுத்தப்படுவதில்லை. தனக்கு வேண்டியதை அடைய எதை வேண்டுமானாலும் செய்வது போன்ற தவறான ஒழுக்கங்கள் சீரியல்களில் கற்பிக்கப்படுகின்றன.

- Advertisement -

அதோடு சில நேரங்களில் வரம்பு மீறிய ஆபாச காட்சிகளும் ஒளிபரப்பப்படுகின்றன. இதனால் இளம் தலைமுறையினர் பாதிக்கப்படும் சூழல் உருவாகிறது. எனவே டிவி சீரியல்கள் முறைப்படுத்த சின்னத்திரை தணிக்கை வாரியத்தை உருவாக்கவும், அவ்வாரியத்தின் சான்றிதழை பெற்ற பின்பே அவை ஒளிபரப்பப்படுவதை உறுதி செய்யவும், அதனை மீறுபவர்களுக்கு அபராதத்தை விதிக்கவும் உத்தரவிட வேண்டும்,” எனக் கோரியிருந்தார்.இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் எம்.எஸ்.ரமேஷ், மரிய கிளாட் ஆகியோர் அடங்கிய அமர்வு, “வழக்கு தொடர்பாக ஒன்றிய அரசின் தொலைதொடர்பு ஒழுங்குமுறை ஆணையம், தமிழ்நாடு அரசு கேபிள் டிவி கழகத்தின் இயக்குநர், தமிழ்நாடு காவல்துறை தலைவர் பதிலளிக்க உத்தரவிட்டு வழக்கை பிப்ரவரி முதல் வாரத்திற்கு ஒத்திவைத்தனர்.
Leave A Reply

Your email address will not be published.