மலைவாழ் கிராம மக்கள் கொண்டாடும் திருவிழாக்களில் வினோதமான பல்வேறு சடங்குகள் இடம்பெற்றிருக்கும். இதைப் பார்ப்பதற்கு மிகவும் வினோதமாக இருக்கும். இதேபோன்று திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள கொடைக்கானல் மலைப்பகுதியில் வாழும் தாண்டிக்குடி கிராம மக்கள் இரண்டு ஆண்டுக்கு ஒரு முறை அப்பகுதியில் உள்ள முத்தாலம்மன் கோவிலில் சேத்தாண்டி திருவிழா என்ற வினோத திருவிழாவை நடத்தி வருகின்றனர்.
இந்த திருவிழாவில் வயது வித்தியாசம் இன்றி அனைத்து ஆண்களும் தங்களது உடல்களின் மேல் சேற்றை ஒருவருக்கொருவர் உடம்பில் பூசிக்கொண்டு ஊரில் வலம் வருவது வழக்கம். இவ்வாறு செய்தால் நோய் நொடி இன்றி வாழவும், விவசாயம் நன்கு செழிக்கும் என்பது இப்பகுதி மக்களின் நம்பிக்கை ஆகும். முக்கியமாக இந்த திருவிழாவில் பெண்கள் கலந்து கொள்ள கூடாது.