சபரிமலை வழித்தடத்தில் பாதயாத்திரை பக்தர்களுக்காக மூன்று வேளை உணவோடு அன்னதானம்!

- Advertisement -

0

சபரிமலை ஐயப்பன் கோயிலில் மண்டல கால வழிபாடுகள் கடந்த மாதம் 16-ம் தேதியில் இருந்து தொடங்கியது. தற்போது தெலுங்கானா, கர்நாடகா, ஆந்திரா உள்ளிட்ட மாநில பக்தர்களே அதிகம் தரிசனத்துக்கு வந்து செல்கின்றனர். இவர்களில் பலரும் பாத யாத்திரையாக சபரி மலைக்கு வருபவர்கள். பல வாரங்களாக மாநிலங்களைக் கடந்து திண்டுக்கல், தேனி வழியே சபரிமலைக்குச் சென்று கொண்டிருக்கின்றனர்.இது போன்றவர்களுக்கு சேவை செய்வதற்காக ஐயப்ப ஆன்மிக சேவை அமைப்பைச் சேர்ந்த பலரும் தொண்டு செய்து வருகின்றனர். இதற்காக ஆங்காங்கே அன்னதான குடில் அமைத்து மூன்று வேளையும் உணவுகளை வழங்கி வருகின்றனர். தேனி மாவட்டத்தின் தொடக்கப் பகுதியான தேவதானப்பட்டி முதல் எல்லைப் பகுதியான லோயர் கேம்ப் வரை இது போன்று ஏராளமான முகாம்கள் அமைக்கப்பட்டுள்ளன.

- Advertisement -

அன்னதானம் மட்டுமல்லாது மருத்துவ உதவி, தங்குவதற்கு இடம் ஒதுக்குதல், வழிகாட்டுதல், ஒளிரும் ஸ்டிக்கர் ஒட்டுதல், காலுறை வழங்குதல், சுக்குமல்லி காபி வழங்குதல், பக்தர்கள் செல்லும் வாகனங்களில் ஏற்படும் பழுது நீக்க வழிகாட்டுதல் உள்ளிட்ட பல்வேறு சேவைகளையும் செய்து வருகின்றனர். தற்போது பாத யாத்திரை பக்தர்களின் எண்ணிக்கை குறைவாகவே உள்ளது. இதனால் அதற்கேற்ப உணவுகள் தயார் செய்யப்பட்டு வழங்கப்படுகின்றன.தொடர்ந்து 9 ஆண்டுகளாக அன்னதானம் உள்ளிட்ட பல்வேறு சேவைகளை செய்து வருகிறோம். பலரும் இதற்காக உணவுப் பொருட்களை வழங்கி வருவதால் தொய்வின்றி இப்பணியை தொடர முடிகிறது. சில வாரங்களில் பாத யாத்திரை பக்தர்களின் எண்ணிக்கை அதிகரித்துவிடும். இதற்காக வழிநெடுகிலும் அன்னதானம் குறித்த வழிகாட்டி பலகைகள் அமைக்கப்பட்டு வருகின்றன” என்று மணி கூறினார்.

Leave A Reply

Your email address will not be published.