திருச்சியில் தமிழ்நாடு அனைத்து சுகாதார செவிலியர்கள் நலச்சங்கங்களின் கூட்டமைப்பு பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி போராட்டம்!

- Advertisement -

0

தமிழ்நாடு கிராம, பகுதி, சமுதாய சுகாதார செவிலியர்கள் சங்கங்களின் கூட்டமைப்பு, தமிழ்நாடு அரசு கிராம சுகாதார செவிலியர் நலச்சங்கம் மற்றும் தமிழ்நாடு அரசு கிராம, பகுதி, சமுதாய சுகாதார செவிலியர்கள் கூட்டமைப்பின் சார்பில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி  மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகில் பெருந்திரள் முறையீடு போராட்டம் நடைபெற்றது.போராட்டத்திற்கு மாவட்ட தலைவர் காயத்ரிதேவி தலைமை வகித்தார்.கோரிக்கைகளை விளக்கி செயல் தலைவர் கோமதி, விமலா தேவி, கூறினார்.சித்ரா,சாந்தி,மாலதி,உமாகாந்தி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

- Advertisement -

காலி பணியிடங்களில் கிராம சுகாதார செவிலியர்களை உடனடியாக கால முறை ஊதியத்துடன் பணியமர்த்த வேண்டுமென்றும், U-WIN – கணினியில் பதிவேற்றம் செய்த பணியினை நீல மீண்டும் செய்ய செல்வதை தவிர்க்க வேண்டுமென்றும், கூடுதல் துணை மையப் பொறுப்பு பணிகளை எவ்வித பொறுப்பு படியும் இன்றி பார்ப்பதற்கு நிர்பந்தம் செய்யக்கூடாது என்றும், கிராம சுகாதார செவிலியர் நிலையில் இருந்து பகுதி சுகாதார செவிலியர் நிலைக்கு பதவி உயர்வில் செல்பவர்களுக்கு மீண்டும் துணை மையப் பொறுப்பு பணிகளுக்கு உள்ளாக்குவதை கைவிட வேண்டும் என்றும்  பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி போராட்டம் நடைபெற்றது.இந்நிகழ்வில் ஜீவா, நாகரெத்தினம், ஜெசிந்தா , பிருந்தா, சந்தோசமேரி, செல்வராணி, அனுராதா, அர்ச்சனா, ராணி, அமிர்தவல்லி உள்பட  ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

 

 

 

 

 

 

 

 

Leave A Reply

Your email address will not be published.