திருச்சி ஜமால் முகமது கல்லூரியில் 4000 மாணவர்களைக் கொண்டு “நெகிழி இல்லா திருச்சி”- உலக சாதனை நிகழ்ச்சி!
திருச்சி ஜமால் முகமது கல்லூரியில் தேசிய மாசு கட்டுபாட்டு தினத்தை முன்னிட்டு தண்ணீர் சுற்றுச்சூழல் மாணவர் மன்றம் மற்றும் தமிழ்நாடு மாசு கட்டுப்பாடு வாரியம் இணைந்து நடத்திய நெகிழிப் பைகளை பயன்படுத்துவதினால் ஏற்படும் தீமைகளை கல்லூரி மாணவர்கள் மற்றும் பேராசிரியர்கள் அறிந்து கொள்ள விழிப்புணர்வு நிகழ்ச்சியாக உலக சாதனை நிகழ்வு- நெகிழி இல்லா திருச்சி என்ற பொருண்மையில் கல்லூரி விளையாட்டு மைதானத்தில் 4000 மாணவர்களைக் கொண்டு நடத்தப்பட்டது.இந்த உலக சாதனை நிகழ்ச்சியில் கல்லூரி செயலாளரும், தாளாளருமான ஏ.கே காஜா நஜ்முதீன், பொருளாளர் ஹாஜி எம்.ஜே. ஜமால் முகமது, உதவி செயலாளர் முனைவர் அப்துஸ் சமது, நிர்வாக குழு உறுப்பினர் & கௌரவ இயக்குனர் கே.என்.அப்துல் காதர் நிஹால் ஆகியோர் முன்னிலை வகித்து வாழ்த்துரை வழங்கினர். கல்லூரியின் முதல்வர் முனைவர் து.இ. ஜார்ஜ் அமலரத்தினம் தலைமை ஏற்றார். சிறப்பு விருந்தினராக திருச்சி மாவட்ட வன அலுவலர் கிருத்திகா கலந்து கொண்டார்.
இந்நிகழ்வில் ஜீனியஸ் இன்டர்நேஷனல் புக் ஆப் ரெக்கார்ட்ஸில் உலக சாதனை நிகழ்ச்சியாக,அதன் தெற்கு பிரிவு முதன்மை மதிப்பீட்டாளர் கே.என். சக்திவேல், அல்போன்சா, கவிதா மற்றும் முனைவர் சுகன்யா ஆகியோர் முன்னிலையில் பதியப்பட்டது. மேலும் தமிழ்நாடு மாசுக்கட்டுப்பாட்டு வாரியத்தின் மாவட்ட சுற்றுச்சூழல் பொறியாளர் சிவரஞ்சனி மற்றும் உதவி சுற்றுச்சூழல் பொறியாளர் ரவிச்சந்திரன் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினார். இந்நிகழ்வு நான்கு மதிப்பிட்டார்களின் மூலம் மதிப்பீடு செய்யப்பட்டது. இந்த உலக சாதனை நிகழ்வில் கல்லூரி மாணவர்கள் 4000 பேர் கலந்துகொண்டு நெகிழியை தவிர்ப்போம் உறுதி மொழியை எடுத்தனர். இந்நிகழ்வில் துணை முதல்வர் முனைவர் ஆர்.ஜாகிர் உசேன், கூடுதல் துணை முதல்வர்கள் முனைவர் ஏ.இஷாக் அகமது, முனைவர் ஏ.ஜே.காஜா மொய்தீன், விடுதி இயக்குனர் முனைவர் கே.என்.முகமது பாசில், பகுதி ஐந்து விரிவாக்க பணி சங்கங்களின் ஒருங்கிணைப்பாளர் டி.செல்வராஜ், துணை ஒருங்கிணைப்பாளர் முகமது இஸ்மாயில் மற்றும் பல்வேறு துறை பேராசிரியர்கள், சேவை சங்கங்களின் ஆலோசகர்கள் ஒருங்கிணைந்து சிறப்பாக நடத்தினர்.