திருச்சி அமமுக சார்பில் டாஸ்மாக் மற்றும் மனமகிழ் மன்றத்தை நிரந்தரமாக மூடிட வலியுறுத்தி உண்ணாவிரதம் போராட்டம்!
திருச்சி வயலூர் ரோடு சீனிவாச நகரில் இயங்கி வரும் டாஸ்மாக் மற்றும் லிங்கநகரில் இயங்கி வரும் மனமகிழ் மன்றத்தை நிரந்தரமாக மூடிட வலியுறுத்தி உறையூர் குறத்தெருவில் மாநகர் மாவட்ட அமமுக சார்பில் உண்ணாவிரதம் போராட்டம் அவைத்தலைவர் சாத்தனூர் ராமலிங்கம் தலைமையில் நடைபெற்றது. மாவட்ட செயலாளர் செந்தில்நாதன் முன்னிலை வகித்து சிறப்புரை ஆற்றினார். உறையூர் பகுதி செயலாளர் கல்நாயக் சதீஷ்குமார் வரவேற்றார். சிறப்பு அழைப்பாளராக தலைமை நிலைய செயலாளர் ராஜசேகரன், அமைப்புச் செயலாளர் முன்னாள் மேயர் சாருபாலா தொண்டைமான் ஆகியோர் கலந்து கொண்டு பேசினர்.
இந்நிகழ்வில் மாவட்டத் துணைச் செயலாளர்கள் தன்சிங், லதா,பொதுக்குழு உறுப்பினர்கள் முதலியார் சத்திரம் ராமமூர்த்தி ,வேதராஜன், திருச்சி புறநகர் தெற்கு மாவட்ட செயலாளர் கலைச்செல்வன் ,கரூர் கிழக்கு மாவட்ட செயலாளர் பாஸ் பிரபு ,மாநகர பகுதி செயலாளர்கள் வேதாத்திரி நகர் பாலு, உமாபதி, கம்ருதீன், மாவட்ட எம்ஜிஆர் இளைஞர் அணி செயலாளர் நாகநாதர் சிவகுமார், முன்னாள் கவுன்சிலர்கள் பெஸ்ட் பாபு, திருச்சி தெற்கு மாவட்ட பாமக செயலாளர் திலிப், தமிழர் தேசிய கட்சி செயலாளர் தளவாய் ராஜேஷ், தமிழ் மாநில காங்கிரஸ் மாவட்டச் செயலாளர் இன்டர்நெட் ரவி, மாநிலச் செயலாளர் ராஜு மற்றும் கட்சி நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டு உண்ணாவிராத போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்தனர்.