ஃபெஞ்சல் புயல் காரணமாக கிருஷ்ணகிரி மாவட்டத்தில் கனமழை கொட்டி தீர்த்து வருகிறது. இதனால் பல இடங்களில் வெள்ளம் சூழ்ந்ததால் பொதுமக்கள் செய்வதறியாது திகைத்து வருகின்றனர். இதனிடையே கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை பேருந்து நிலையம் அருகே வாணியம்பாடி செல்லும் சாலையில் உள்ள ஏரி நிரம்பி வழிந்தது. இதன் காரணமாக சாலையில் இருந்த வாகனங்கள் நீரில் அடித்துச் செல்லப்பட்ட காட்சிகள் வெளியாகி அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ளது. மேலும் கிருஷ்ணகிரி மாவட்டத்தில் 300 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு 50 சென்டி மீட்டர் மழை கொட்டி தீர்த்துள்ளது .
மேலும் வெள்ளம் தொடர்பான உதவிகளுக்கு கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் 24 மணி நேரமும் கட்டணமில்லா தொலைபேசி எண் இயங்கி வருவதாகவும், 1077 என்ற எண்ணுக்கு அழைத்து பொதுமக்கள் உதவிகளை பெறலாம் எனவும் மாவட்ட ஆட்சியர் கே.எம்.சரயு தெரிவித்துள்ளார். இதனிடையே மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு பொறுப்பு அமைச்சர்களை நியமனம் செய்து முதலமைச்சர் ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். அதன்படி கிருஷ்ணகிரி மாவட்டத்திற்கு அமைச்சர் முத்துசாமி நியமனம் செய்துள்ளார்.