நெல்லையில் நாம் தமிழர் கட்சியில் இருந்து 200 க்கும் மேற்பட்டோர் நிர்வாகிகள் விலகல்…! (வீடியோ இணைப்பு)

- Advertisement -

0

திருநெல்வேலியில்  நடந்த நாம் தமிழர் கட்சி நிர்வாகிகள் ஆலோசனை கூட்டத்தில் பங்கேற்ற அதன் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கட்சியினரை ஒருமையில் பேசுவதாக கூறி சிலர் வெளியேறினர்.இளைஞர் அணி நிர்வாகிகள், குருதிக்கொடை அமைப்பினர் சுமார் 200 பேர் அக்கட்சியிலிருந்து வெளியேறியதாக நிர்வாகிகள் பார்வின், கண்ணன் உள்ளிட்டோர் தெரிவித்தனர்.

- Advertisement -

பாஜகவுக்கு ஆதரவாக சீமான் பேசுவதாகவும், நாதக அடுத்த கட்டத்திற்கு நகராது என்று கூறிய அவர்கள் சீமான் நாம் தமிழர் கட்சி கொள்கைகளில் இருந்து விலகிவிட்டார். திருநெல்வேலியில் ஒரே குடும்பத்தில் ஐந்து பேருக்கு பதவி வழங்குகிறார். கட்சியினரை சந்திப்பதே இல்லை. நிர்வாகிகளை ஒருமையில் பேசுகிறார். நாங்கள் ஸ்லீப்பர் செல் அல்ல.உழைப்புக்கு மரியாதை கொடுக்கும் கட்சியில் இணைவோம். நாம் தமிழர் கட்சி தான் ஸ்லீப் ஆகி விட்டது என்றனர்.

Leave A Reply

Your email address will not be published.