முன்னாள் மாமன்ற உறுப்பினர் உஷாராணி கணவர் திருவுருவ படத்திறப்பு விழா:அமைச்சர் அன்பில் மகேஷ் பெய்யாமொழி பங்கேற்பு!
திருச்சி கொட்டப்பட்டு ஜீவா தெருவில், மாநகராட்சி நகர அமைப்பு குழு தலைவரும், பொன்மலை பகுதி திமுக செயலாளருமான தர்மராஜ் அவரது சகோதரர் மறைந்த பெரியசாமி தெத்துவாண்டர் திருவுருவ படத்தை தெற்கு மாவட்ட கழக செயலாளரும்,பள்ளி கல்வித்துறை அமைச்சருமான அன்பில் மகேஷ் பெய்யாமொழி திறந்து வைத்தார்.இந்நிகழ்வில் மாநகர கழகச் செயலாளர் மதிவாணன்,முன்னாள் மாமன்ற உறுப்பினர் உஷாராணி, மாவட்ட திமுக பிரதிநிதி கோபிநாத், கிருஷ்ணவேணி, தர்மராஜ், பவதாரணி, அருண்குமார், அபிநயா மற்றும் கட்சி நிர்வாகிகள், குடும்பத்தினர் பலர் கலந்து கொண்டனர்