பாஜகவை சார்ந்த வேலூர் இப்ராஹிம் மீது நடவடிக்கை எடுக்க கோரி போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் எஸ்டிபிஐ கட்சி மனு!
சோசியல் டெமாக்ரடிக் பார்ட்டி ஆப் இந்தியா (SDPI)- கட்சியை பற்றி தொடர்ச்சியாக அவதூறாக பேசி தமிழ்நாட்டில் மத மோதலை உண்டாக்க வேண்டும் என்று திட்டமிட்டு செய்தி அளித்த பாஜகவை சார்ந்த வேலூர் இப்ராஹிம் மீது நடவடிக்கை எடுக்க கோரி இன்று திருச்சி தெற்கு மாவட்டத்தின் சார்பாக மாவட்ட தலைவர் K.தமீம் அன்சாரி அவர்களின் தலைமையில் காவல் ஆணையரிடம் புகார் மனு அளிக்கப்பட்டுள்ளது.மேலும் இது போன்ற மத மோதலை தூண்டும் விதமாக பேசி வரும் வேலூர் இப்ராஹீமை கைது செய்து அமைதி பூங்காவான தமிழகத்தினை பாதுகாக்குமாறு எஸ்டிபிஐ கட்சியின் சார்பாக காவல் துறை ஆணையரிடம் எடுத்துரைக்கப்பட்டது.
இந்த காவல்துறை சந்திப்பில் எஸ்டிபிஐ கட்சி திருச்சி தெற்கு மாவட்ட துணை தலைவர் பிச்சைக்கனி, மாவட்டச் செயலாளர்கள் மதர்.Y. ஜமால் முஹம்மது, தளபதி அப்பாஸ், மாவட்ட செய்தி தொடர்பாளர் Dr.S.பக்ருதீன், மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் பொன்னகர் ரபீக், இமாம் ஷாகுல் ஹமீது இன்ஆமி உள்ளிட்ட நிர்வாகிகள் உடன் இருந்தனர்.