சேலம் ஓமலூர் பைபாஸ் ரோட்டில் 24 மனை தெலுங்கு செட்டியார்கள் பேரவையினர் நடத்தும் நூற்றாண்டு மாபெரும் மாநாடு இன்று (16-ந்தேதி) நடைபெறுகிறது.இம்மாநாட்டில் 24 மனை தெலுங்கு செட்டியார்கள் பேரவை நிறுவன தலைவர் பி.எல்.ஏ. ஜெகநாத்மிஸ்ரா கலந்து கொண்டு சிறப்புரையாற்றுகிறார்.இதில் மாநில தலைவர் ஆர்.எஸ். தமிழ்செல்வன், மாநில, மாவட்ட நிர்வாகிகள் உள்ளிட்ட பலர் கலந்து கொள் கின்றனர் .
மாநாட்டில் கலந்து கொள்ள மாவட்ட தலைவர் சிவகுமார் ஏற்பாட்டில் மாவட்ட இளைஞரணி செயலாளர் சக்திபாபு ஒருங்கிணைத்து திருச்சி, உறையூர், பாளையம் பஜார் 24 மனை செட்டியார்கள் பேரவை அலுவலகம் முன்பு இருந்து 100 க்கு மேற்பட்ட வேன்கள் மூலம் புறப்பட்டு சென்றது.