தமிழகத்தின் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் நேற்று தன்னுடைய 47 வது பிறந்தநாள் விழாவை கொண்டாடினார். இவருடைய பிறந்த நாளை முன்னிட்டு திமுகவினர் மாநிலம் முழுவதும் நலத்திட்ட உதவிகள் வழங்கினார். இந்நிலையில் பிறந்தநாளுக்கு அரசியல் கட்சி தலைவர்கள் மற்றும் திரையுலக பிரபலங்கள் பலரும் வாழ்த்துக்களை தெரிவித்த நிலையில் அதற்கு உதயநிதி ஸ்டாலின் நன்றி தெரிவித்து அறிக்கை வெளியிட்டதோடு திமுக நிர்வாகிகள் மற்றும் தொண்டர்களிடம் தனக்கான பிறந்தநாள் பரிசையும் கேட்டுள்ளார்.பிறந்த நாளில் உங்கள் அனைவரின் வாழ்த்து மழையிலும் நனைந்தோம். வாழ்த்திய அத்தனை நல்லுள்ளங்களுக்கும் என் அன்பும், நன்றியும். 2026ல் இலக்கு200 எனும் லட்சியப் பயணத்தை நோக்கி வீறுநடை போடுவோம் .