மழைக்காலத்தில் பாதங்களில் வெடிப்பு பிரச்சனையா..?வீட்டிலேயே சில வைத்தியங்களை மேற்கொள்ளலாம்…

- Advertisement -

0

பெண்கள் துணி துவைப்பது, குழந்தைகளை குளிப்பாட்டுவது போன்ற தண்ணீர் சம்பந்தப்பட்ட செயல்களை மேற்கொள்ளும்போது குதிகால் வெடிப்பு பிரச்சனையை உண்டாக்கும். இதையடுத்து, குதிகால்களை பராமரிக்க வீட்டிலேயே சில வைத்தியங்களை மேற்கொள்ளலாம்.சில சமயங்களில் குதிகால் வெடிப்பினால் அதிக வலியும் ஏற்படும். குதிகால் வெடிப்பு அதிகரிக்கும்போது சில சமயங்களில் இரத்தமும் வெளியேற தொடங்கும். குளிர்காலத்தில் குதிகால் வெடிப்பு பிரச்சனை ஆண்களை விட பெண்களுக்கே அதிகமாக ஏற்படும்.இதையடுத்து, குதிகால்களை பராமரிக்க வீட்டிலேயே சில வைத்தியங்களை மேற்கொள்ளலாம்.

- Advertisement -

குதிகால் வெடிப்பு ஏற்படாமல் இருக்க தேங்காய் எண்ணெயை பயன்படுத்தலாம். இது நல்ல பலனை தரும். தேங்காய் எண்ணெய் இயற்கையாகவே சருமத்திற்கு ஊட்டமளிக்கும் திறன் உள்ளது. அதன்படி, உங்கள் குதிகால்களை வெதுவெதுப்பான எண்ணெயால் மசாஜ் செய்தால் விரைவில் குணமாகும்கற்றாழை ஜெல் சருமத்திற்கு மிகவும் பயனுள்ளதாக கருதப்படுகிறது. இது ஈரப்பதமூட்டும் முகவராக செயல்படுகிறது. குதிகால் வெடிப்பில் இருந்து நிவாரணம் பெற கற்றாழை ஜெல்லை பாதங்களில் தடவலாம். இது குதிகால்கள் பிரச்சனையை விரைவில் சரிசெய்யும்.தேன் சருமத்திற்கு இயற்கையான மாய்ஸ்சரைசராக செயல்படுகிறது. இதில் உள்ள கிருமி நாசினிகள் குதிகால் வெடிப்புகளை குணப்படுத்தும். உங்கள் பாதங்களைக் கழுவி உலர்த்திய பின், அவற்றில் தேன் தடவலாம்.

Leave A Reply

Your email address will not be published.