தமிழ் தேசிய தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன் அவரது பிறந்த நாளை முன்னிட்டு திருச்சி மாநகர் மாவட்டம் நாம் தமிழர் கட்சி குருதிக்கொடை பாசறை சார்பாக குருதிக்கொடை முகாம் சிறப்பாக நடைபெற்றது. இதில் மாநிலக் கொள்கை பரப்புச் செயலாளர்கள் சாட்டை துரைமுருகன் ,அசுரன் சரவணன், மண்டல செயலாளர்கள் பிரபு தனபாலன் ,ஜல்லிக்கட்டு ராஜேஷ் தலைமையில் நடைபெற்றது.திருச்சி கிழக்கு மாவட்ட தலைவர் நாகேந்திரன், மாவட்ட செயலாளர் ரஞ்சித் மற்றும் நிர்வாகிகள் பங்கேற்றனர். நிகழ்ச்சியில் குருதிக்கொடை பாசறை செயலாளர் செல்வகுமார் மற்றும் நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர். முடிவில் மலைக்கோட்டை பகுதி செயலாளர் ஹரிஹரன் நன்றி கூறினார். குருதி கொடை முகாமில் கலந்து கொண்ட அனைவருக்கும் சான்றிதழ் மற்றும் விருது வழங்கப்பட்டன.