தமிழ்நாடு தேசிய நலக்குழும இயன்முறை மருத்துவர்கள் சங்கம் நடத்திய திருச்சியில் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம்!
தமிழ்நாடு தேசிய நலக்குழும இயன்முறை மருத்துவர்கள் சங்கம் நடத்தும் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் திருச்சி ரயில் நிலையம் எதிரில் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்தில் TNNHMPTA முதுநிலைத் தலைவர் சுரேஷ் சுப்பையா, TNPHCPTA மாநிலத் தலைவர் ராதாகிருஷ்ணன் ஆகியோர் தலைமை வகித்தனர். TNNHMPTA செயலாளர் ரிச்சர்ட், TNPHCPTA ஒருங்கிணைப்பாளர் மோகன்ராஜ் ஆகியோர் முன்னிலை வகித்தனர். UHMRPTA மாநிலத் தலைவர் ராஜதுரை ஆர்ப்பாட்டத்தை துவங்கி வைத்தார். TNPDWA மாநில பொது செயலாளர் சசிகுமார் கோரிக்கையை விளக்க உரையாற்றினார்.
ஆர்ப்பாட்டத்தில் கொரோனா காலங்களில் அரசு மருத்துவமனை, கோவிட் கேர் மையங்கள் மற்றும் கொரோனா கட்டுப்பாட்டு அறைகளில் தொடர்ந்து பணி புரிந்துள்ள இயன்முறை மருத்துவர்களுக்கு தற்போது அறிவிக்கப்பட்டுள்ள நிரந்தரப் பணிக்கான மருத்துவ பணியாளர்கள் தேர்வுக்கு கொரோனா ஊக்க மதிப்பெண் அளிப்பதற்கான அரசாணை வெளியிட வலியுறுத்தியும், தமிழ்நாடு தேசிய நல குழுமத்தில் ஒப்பந்தபட்ட அடிப்படையில் இயன்முறை மருத்துவராக பணி புரிவதற்கு குறைந்தபட்ச கல்வித் தகுதி BPT பட்ட படிப்பாக உள்ளது. எனவே அதன் அடிப்படையில் எங்களது ஊதியத்தை மாதம் 35000/- என புதியதாக நிர்ணயம் செய்து தர தமிழக அரசை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த கோரிக்கை சம்பந்தமாக ஜூலை மாதம் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது என்பது குறிப்பிடத்தக்கது.சிபிஐ (எம் ) மாநில உறுப்பினர் ஸ்ரீதர்,நாம் தமிழர் கட்சியின் மாநில கொள்கை பரப்புச் செயலாளர் அசுரன் சரவணன், TNPDWA தலைவர் வெங்கடசுப்பிரமணியம், TNPDWA மாநிலத் துணைச் செயலாளர் மேரி கனிஷ்டா, SSAPTA திருச்சி மாவட்ட பொருளாளர் டேவிட் லிவிங்ஸ்டன், TNPDWA மாநில இணை ஒருங்கிணைப்பாளர் அருள் பிரகாசம் ஆகியோர் கலந்துகொண்டு சிறப்புரை ஆற்றினார்கள். TNPHCPTA செயலாளர் வீர சிவபூஷணன் நன்றியுரை கூறினார்.