கோவை மாவட்டம் பொள்ளாச்சியில் உள்ள ஒரு மண்டபத்தில் கடந்த சில நாட்களுக்கு முன்பு ஒரு திருமணம் நடைபெற்றது. அந்த திருமணத்திற்கு வந்தவர்களுக்கு சுவையான உணவு பரிமாறப்பட்டது. வழக்கமாக உணவு சாப்பிட ‘டைனிங் டேபிள்’தான் போடப்பட்டு இருக்கும். ஆனால், பொள்ளாச்சி தென்னை நகரம் என்பதால், தேங்காய் வடிவில் ‘டைனிங் டேபிள்’ அமைத்து இருந்தனர். 100-க்கும் மேற்பட்ட தேங்காய் வடிவிலான ‘டைனிங் டேபிள்’ அமைக்கப்பட்டு இருந்தது.இதனை திருமணத்திற்கு வந்தவர்கள் ஆச்சரியத்துடன் பார்த்தனர். மேலும் தேங்காய் வடிவில் உள்ள ‘டைனிங் டேபிளில்’ மகிழ்ச்சியுடன் அமர்ந்து விருந்து சாப்பிட்டனர்.
அத்துடன் தங்களது செல்போனில் புகைப்படம், வீடியோ எடுத்து சமூக வலைத்தளங்களில் பதிவிட்டனர். இந்த வீடியோ தற்போது வைரலாக பரவி வருகிறது.வீடுகளில் எளிமையாக நடைபெற்ற காலம் மாறி, தற்போது மண்டபங்களில்தான் பெரும்பாலும் நடக்கின்றன. சிலர், நடுக்கடலிலும், நடுவானிலும் கூட திருமணத்தை நடத்துகின்றனர்.திருமண விழாக்களில் தங்களது வசதிக்கு ஏற்ப மண மேடை, உணவு அரங்கு உள்ளிட்டவற்றை அமைத்து கொள்கின்றனர்.