ஆந்திராவில் அண்ணா கேண்டினில் 5 ரூபாய்க்கு மூன்று வேளை உணவு …!

- Advertisement -

0

ஒய்ஆர் காங்கிரஸ் கட்சி கடந்த முறை ஆட்சிக்கு வந்ததும், தெலுங்கு தேசம் அரசு முன்னாள் முதல்வர் என்.டி.ஆர் பெயரில் தொடங்கிய அண்ணா கேன்டீன்களை அப்போதைய முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி மூடிவிட்டார்.இதனை தொடர்ந்து ஆந்திர மாநில சட்டமன்ற தேர்தலில் தெலுங்கு தேசம் கட்சி பெரும் வெற்றி பெற்று சந்திரபாபு நாயுடு முதலமைச்சராக பதவியேற்ற முதல் நாளில் கையெழுத்திட்ட ஐந்து திட்டங்களில் அண்ணா கேண்டீன் திட்டமும் ஒன்று.

 

- Advertisement -

அதன்படி ஆந்திராவில் உள்ள 14 மாவட்டங்களில் அண்ணா கேண்டீன்கள் திறக்கப்பட்டது.காலை, மதியம், இரவு என மூன்று வேளையும் 5 ரூபாய்க்கு அறுசுவை உணவு வழங்கப்படுகிறது. தினமும் ஒரு லட்சம் பேர் உணவு சாப்பிடுவார்கள் என அதிகாரிகள் தெரிவித்தனர்.உணவுத் தரம் சுவையாக வழங்க வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது. மாநிலம் முழுவதும் பல இடங்களில் அண்ணா கேண்டீன்கள் திறக்கப்படும் எனத் தெரிவித்தனர்.

அண்ணாகேன்டீனை திறந்து வைத்துவிட்டு சந்திரபாபுவும் அவரது மனைவி புவனேஸ்வரி அண்ணாவும் கேன்டீனில் காலை உணவை சாப்பிட்டனர். தொடக்க விழாவை வடக்கு ஆந்திராவில் நடத்த முதல்வர் சந்திரபாபு நாயுடு முதலில் திட்டமிட்டிருந்தார். ஆனால், எம்எல்சி தேர்தல் விதிமுறைகள் அமலுக்கு வந்ததால், இத்திட்டத்தின் தொடக்க விழா கிருஷ்ணா மாவட்டத்தில் உள்ள குடிவாடாவுக்கு மாற்றப்பட்டது.இந்த கேன்டீன்களில் தர சோதனை நடத்தி சுகாதாரம் பேணப்படுவதை உறுதி செய்ய மாநிலம் முழுவதும் உள்ள மாவட்ட ஆட்சியர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.இத்திட்டத்தின் கீழ், இந்த வாரம் முதல் கட்டமாக 100 அண்ணா உணவகங்கள் தொடங்கப்படும்.

Leave A Reply

Your email address will not be published.