உலக கேரம் போட்டியில் அசத்தல் சாதனை! தமிழகத்தின் தங்க மங்கை என துணை முதல்வர் பாராட்டு!
அமெரிக்காவில் 6வது உலகக் கோப்பை கேரம் சாம்பியன்ஷிப் போட்டிகள் நடைபெற்று வந்தன. இந்நிலையில் தமிழ்நாடு வீராங்கனை 17 வயது காசிமா 3 பிரிவுகளிலும் தங்கம் வென்றுள்ளார்.இவர் புது வண்ணாரப்பேட்டையைச் சேர்ந்த ஆட்டோ ஓட்டுநரின் மகளாள் ஆவார்.காசிமா மகளிர் தனிப்பிரிவு, இரட்டையர் பிரிவு, குழுப் பிரிவு என 3 பிரிவிகளிலும் முதலிடம் பிடித்து அசத்தல் சாதனை படைத்துள்ளார்.
ஜூலை மாதம் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் காசிமாவின் பயணத்திற்கு ரூ.1.50 லட்சம் நிதியுதவி வழங்கி வாழ்த்தியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.அமெரிக்காவில் கலிஃபோா்னியா நகரில் நவம்பா் 10 முதல் 17ம் தேதி வரையில் உலக கேரம் போட்டி நடைபெற்றது என்பது குறிப்பிடத்தக்கது.
அமெரிக்காவில் நடந்த போட்டியில் தமிழ்நாடு வீராங்கனைகள் காசிமா, நாகஜோதி, மித்ரா, மரிய இருதயம் கலந்து கொண்டனர்.நவம்பர் 21ம் தேதி அமெரிக்காவில் இருந்து பதக்கத்தோடு வீராங்கனை காசிமா நாடு திரும்ப உள்ளது குறிப்பிடத்தக்கது.