வெட்டிங் லோன் வழங்கும் பிரபல மேட்ரிமோனியல் இணையதளம்..!
வெட்டிங் லோன் வழங்கும் பிரபல மேட்ரிமோனியல் இணையதளம்..!
வீடு, பைக், கார் வாங்க ஏராளமான வங்கிகள் மற்றும் தனியார் நிறுவனங்கள் லோன் வழங்கி வரும் நிலையில், தற்போது முதல் முறையாக சென்னை சேர்ந்த மேட்ரிமோனியல் நிறுவனம் ஒன்று திருமண கடன் வழங்கும் வெட்டிங் லோன் என்ற திட்டத்தை ஆரம்பித்துள்ளது.
இந்த திட்டத்திற்கு நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது. மேட்ரிமோனி டாட் காம் என்ற இணையதளம் ஏற்கனவே பிரபலம் என்பதும், இதன் மூலம் ஆயிரக்கணக்கான திருமணங்கள் நடைபெற்றுள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில், இந்த நிறுவனம் வெட்டிங் லோன் என்ற புதிய முயற்சியை எடுத்துள்ளது. ஐடிஎப்சி, டாட்டா கேப்பிட்டல், L&T பைனான்ஸ் ஆகிய நிறுவனங்களுடன் இணைந்து இந்த லோன் முயற்சியை இந்நிறுவனம் மேற்கொண்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது