திருச்சி உறையூரில் 50 தாய்மார்களுக்கு ஊட்டசத்து அடங்கிய பெட்டைக்கத்தை வழங்கிய அமைச்சர் கே. என். நேரு!
சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை சார்பில் ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சித் திட்டத்தின் கீழ் “ஊட்டச்சத்தை உறுதி செய்” திட்டத்தை தமிழக அரசு முன் நின்று செயல்படுத்தி வருகிறது.அதன் அடிப்படையில், திருச்சி மாவட்டம், உறையூர் மேட்டுத்தெரு அங்கன்வாடி மையத்தில் நடந்த நிகழ்ச்சியில் ஊட்டச்சத்தை உறுதி செய் திட்டத்தின் கீழ் 50 தாய்மார்களுக்கு பேரிச்சம்பழம்,நெய், விட்டமின்,டானிக், புரதச்சத்து பவுடர் உள்ளிட்ட பொருள்கள் அடங்கிய ஊட்டச்சத்து பெட்டகத்தை நகரப்புற வளர்ச்சி துறை அமைச்சர் கே.என். நேரு வழங்கினார். அருகில் கலெக்டர், பிரதீப் குமார், மாநகராட்சி மேயர் அன்பழகன் மற்றும் மாநகராட்சி அதிகாரிகள், அங்கன்வாடி ஊழியர்கள் கலந்து கொண்டனர்.