திருச்சி ஜமால் முகமது கல்லூரியில் புற்றுநோய் விழிப்புணர்வு குறித்த சிறப்புச் சொற்பொழிவு!
திருச்சி ஜமால் முகமது கல்லூரி சுயநிதி பெண்கள் பிரிவு தேசிய மாணவர் படை சார்பில் புற்றுநோய் விழிப்புணர்வு குறித்த சிறப்புச் சொற்பொழிவு நடைபெற்றது. இந்நிகழ்வில் சிறப்பு விருந்தினராக ஹர்ஷமித்ரா புற்றுநோய் மையத்தின் புற்றுநோயியல் நிபுணரும்,அதன் இயக்குனருமான மருத்துவர்
கோவிந்தராஜவர்த்தனன் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார். புற்றுநோயை ஆரம்ப காலத்தில் கண்டறிவது குறித்தும், அதனைத் தடுப்பது குறித்தும் அதற்கான சிகிச்சை முறைகள் குறித்தும் தெளிவாக மாணவிகளிடையே எடுத்துரைத்தார். பொது சுகாதாரம் குறித்து மாணவர்களிடம் விழிப்புணர்வு ஏற்பட வேண்டும் எனவும் எடுத்துரைத்தார். முன்னதாக இந்நிகழ்வில் கல்லூரி உதவிச்செயலாளர் முனைவர் கா. அப்துஸ் சமது தலைமை உரையாற்றினார்.துணை துணை முதல்வர் முனைவர் ஆர். ஜாகிர் உசேன் வாழ்த்துரை வழங்கினார்.
இந்நிகழ்வில் கல்லூரி செயலர் மற்றும் தாளாளர் அ.கா. காஜா நஜிமுதீன், பொருளாளர் ஹாஜி எம்.ஜே. ஜமால் முகமது,உதவிச் செயலாளர் , ஆட்சி மன்றக் குழு உறுப்பினர் மற்றும் கௌரவ இயக்குநர் முனைவர் கே.என். அப்துல் காதர் நிஹால், முதல்வர் முனைவர் டி.ஐ. ஜார்ஜ் அமலரத்தினம், துணை முதல்வர் முனைவர் ஆர். ஜாஹிர் உசேன், கூடுதல் துணை முதல்வர்கள் முனைவர் ஏ. இஷாக் அகமது, முனைவர் ஏ.ஜே. ஹாஜா மொஹிதீன், செல்வி ஏ.பஃமிதா பானு,விடுதி நிர்வாக இயக்குனர் ஹாஜி முனைவர் கா.ந. முகமது பாசில், பெண்கள் விடுதி இயக்குநர் செல்வி ஜெ.ஹாஜிரா பாத்திமா, ஆகியோர் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.
இறுதியாக புற்றுநோய் குறித்த விழிப்புணர்வினை பொதுமக்களிடையே எடுத்துரைப்பதற்கான உறுதிமொழியினை தேசிய மாணவர் படை மாணவிகள் ஏற்றனர்.