பவுர்ணமி நாட்களில் திருச்செந்தூர் முருகன் கோவில் கடற்கரையில் இரவு தங்கி, முருகனை வழிபாடு செய்தால் நினைத்த காரியம் நடைபெறும் என்று ஐதீகம். இதனால் பவுர்ணமி நாட்களில் திருச்செந்தூர் முருகன் கோவிலுக்கு வருகை தரும் பக்தர்களின் எண்ணிக்கை அதிகரித்து காணப்படும்.இன்று பவுர்ணமி என்பதால் திருச்செந்தூர் முருகன் கோவிலில் பக்தர்கள் கூட்டம் அதிகமாக காணப்பட்டது. மழையையும் பொருட்படுத்தாமல் மக்கள் முருகனை வழிபட்டு வருகின்றனர். இந்நிலையில் திருச்செந்தூர் கடற்கரையில் பக்தர்கள் தங்க தடை விதிக்கப்பட்டுள்ளது. தொடர்மழை பெய்து வருவதால் கடற்கரையில் பக்தர்கள் தங்க வேண்டாம் என்று பக்தர்களின் பாதுகாப்பு கருதி திருச்செந்தூர் காவல் துறை நடவடிக்கை எடுத்துள்ளது.