வெஸ்ட் இண்டீசில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இங்கிலாந்து கிரிக்கெட் அணி 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடி வருகிறது. இதில் முதல் இரு போட்டிகளில் இங்கிலாந்து வெற்றி பெற்று தொடரில் 2-0 என முன்னிலையில் இருந்தது. இந்த நிலையில், இரு அணிகளுக்கும் இடையிலான 3வது டி20 போட்டி நடைபெற்றது. இதில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி பேட்டிங்கை தேர்வு செய்தது. அதன்படி, முதலில் பேட்டிங் செய்த வெஸ்ட் இண்டீஸ் அணி 20 ஓவர்களில் 8 விக்கெட்டை இழந்து 145 ரன்கள் மட்டுமே எடுத்தது.
வெஸ்ட் இண்டீஸ் தரப்பில் அதிகபட்சமாக ரோவ்மன் பவல் 54 ரன்கள் எடுத்தார். இங்கிலாந்து தரப்பில் சாகிப் மஹ்மூத், ஜேமி ஓவர்டன் தலா 3 விக்கெட்டுகள் வீழ்த்தினர். தொடர்ந்து 146 ரன் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய இங்கிலாந்து அணி 19.2 ஓவர்களில் 7 விக்கெட்டை இழந்து 149 ரன் எடுத்து வெற்றி பெற்றது. இங்கிலாந்து அணி தரப்பில் அதிகபட்சமாக சாம் கரன் 41 ரன் எடுத்தார். இந்த வெற்றியின் மூலம் 5 போட்டிகள் கொண்ட தொடரை 3-0 என இங்கிலாந்து கைப்பற்றியது. இரு அணிகளுக்கும் இடையிலான 4வது போட்டி நாளை (நவ.16) நடைபெறுகிறது.