பாரதிதாசன் பல்கலைக்கழக கல்லூரிகளுக்கு இடையிலான மாணவர்களுக்கான வாலிபால் போட்டியில் வெற்றி முதலிடம் பிடித்த திருச்சி ஜமால் மகமது கல்லூரி!

- Advertisement -

0

திருச்சி பாரதிதாசன் பல்கலைக்கழக இணைவு பெற்ற திருச்சி, தஞ்சை மண்டலத்லதிற்குட்பட்ட கல்லூரிகளின் மண்டலங்களுக்கு இடையிலான மாணவர்களு க் கான வாலிபால் போட்டி தஞ்சை, கரந்தை டி யூ கே கலை கல்லூரியில் லீக் மற்றும் சூப்பர் லீக் முறையில் நடைபெற்றது.திருச்சி மண்டலத்திலிருந்து, செயின்ட் ஜோசப், ஜமால் முகமது, பிஷப் ஹீபர், பாரதிதாசன் பல்கலைக்கழக துறைகள் அணி, தஞ்சை மண்டலத்திலிருந்துதிருவாரூர், குளோபல் கலை மற்றும் அறிவியல், குடந்தை, அரசு கலை, அதிராமபட்டினம், காதிர் முகைதீன், புதுகை, மாமன்னர் ஆகிய 8 கல்லூரி அணிகள் லீக் போட்டிகளில் விளையாட தகுதி பெற்றன.

- Advertisement -

லீக் போட்டிகளில் வென்று முதல் நான்கு இடங்களை பிடித்த திருச்சி,ஜமால் முகமது, பிஷப் ஹீபர், செயின்ட் ஜோசப் மற்றும் திருவாரூர், குளோபல் கலை மற்றும் அறிவியல் கல்லூரி அணிகள் சூப்பர் லீக் போட்டிகளில் விளையாடின.இதில் சூப்பர் லீக் போட்டிகளில் ஜமால் முகமது கல்லூரி, பிஷப் ஹீபர் கல்லூரியை 25-16; 25-19; 25-19 என்ற புள்ளிகள் கணக்கிலும், ஜோசப் கல்லூரியை 25-21; 25-16; 25-17 என்ற புள்ளிகள் கணக்கிலும், திருவாரூர், குளோபல் கலை மற்றும் அறிவியல் கல்லூரியை 25-11;25-14; 15-12 என்ற புள்ளிகள் கணக்கிலும் மூன்று போட்டிகளிலும் வென்று முதலிடம் பிடித்து திருச்சி, பாரதிதாசன் பல்கலைக்கழக வாலிபால் போட்டியில் சாம்பியன் அணியாக திகழ்ந்தது.

பிஷப் ஹீபர் கல்லூரி, செயின்ட் ஜோசப் கல்லூரியை 21-25; 25-20: 25-20, 25-14 என்ற புள்ளிகள் கணக்கிலும், திருவாரூர், குளோபல் கலை மற்றும் அறிவியல் கல்லூரியை 25-18 25-19, 25-17 என்ற புள்ளிகள் கணக்கிலும் இரண்டு போட்டிகளிலும் வென்று இரண்டாவது இடத்தை பிடித்தது.செயின்ட் ஜோசப் கல்லூரி, திருவாரூர், குளோபல் கலை மற்றும் அறிவியல் கல்லூரியை 25-20, 21-25, 25-17, 25-16 என்ற புள்ளிகள் கணக்கில் ஒரு போட்டியில் வென்று மூன்றாவது இடம் பிடித்தது.பின்னர் நடந்த பரிசளிப்பு விழாவில் தஞ்சை, கரந்தை டி யூ கே கலை கல்லூரி செயலாளர்ஆர்.சுந்தரவதனம், சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு கல்லூரி குழு உறுப்பினர் எஸ்.செந்தமிழ்செல்வன்,முதல்வர், ஆர். ராஜமணி, உடற்கல்வி இயக்குனர் கே. ஐவின் ஜபக்குமார் ஆகியோர் முன்னிலையில் வெற்றி பெற்று முதல் நான்கு இடங்களை பிடித்த கல்லூரி அணிகளுக்கு கோப்பைகள் மற்றம் சான்றிதழ்களை வழங்கினார்.

Leave A Reply

Your email address will not be published.