தமிழக வெற்றிக்கழகத்தின் முதல் மாநாடு இன்று விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டில் உள்ள விசாலை என்ற இடத்தில் நடைபெற இருக்கிறது. இந்த மாநாடு இன்று மாலை 4 மணியளவில் தொடங்கும் நிலையில் காலை 11 மணி முதல் பொதுமக்களுக்கு மாநாட்டு திடலுக்குள் செல்ல அனுமதி வழங்கப்பட இருக்கிறது. இந்த மாநாட்டில் பல முக்கிய பிரபலங்கள் மற்றும் சினிமா நட்சத்திரங்கள் என ஏராளமானோர் கலந்து கொள்வார்கள் என்பதால் பாதுகாப்பு பணியில் பவுன்சர்கள் ஈடுபடுத்தப்பட்டதோடு 6000-க்கும் போலீசாரும் பாதுகாப்பு பணியில் ஈடுபட இருக்கிறார்கள். அதன் பிறகு விக்கிரவாண்டிக்கு செல்லும் வழியில் போக்குவரத்து க்கு இடையூறு ஏற்படக்கூடாது என்பதற்காக வெளி மாநில வாகனங்களை வேறு வழியில் மாற்றிவிட காவல்துறை திட்டமிட்டுள்ள நிலையில் மாநாட்டுக்கு வரும் வாகனங்களை மட்டுமே அந்த வழியில் செல்வதற்கு அனுமதிக்க உள்ளது.இதன் காரணமாக நாளை போக்குவரத்து நெரிசல் ஏற்படாதவாறு விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டிக்கு வரலாம்.
இதேபோன்று வாகனங்களை பார்க்கிங் செய்வதற்கு வசதியாக விக்கிரவாண்டியில் மிக பிரம்மாண்டமாக பார்க்கிங் வசதி செய்யப்பட்டுள்ளதோடு அந்த இடங்களில் மின்விளக்குகளும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. மாநாடு நடைபெறும் இடத்தை சுற்றி 700 க்கும் மேற்பட்ட சிசிடிவி கேமராக்கள் மாற்றப்பட்டுள்ள நிலையில் 300-க்கும் மேற்பட்ட தற்காலிக கழிவறை வசதிகளும் செய்யப்பட்டுள்ளது.இந்த மாநாட்டில் கிட்டத்தட்ட 3 லட்சம் பேர் வரை கலந்து கொள்வார்கள் என்பதால் மிகப்பெரிய அளவில் எதிர்பார்ப்பு என்பது நிலவுகிறது. இன்று நடைபெறும் மாநாட்டில் விஷால், ஏ.ஆர் முருகதாஸ், லோகேஷ் கனகராஜ் மற்றும் வெங்கட் பிரபு உட்பட பலர் கலந்து கொள்வதாக கூறப்படுகிறது.மாநாட்டை சினிமா பிரபலங்கள் மட்டும் இன்றி ஒட்டுமொத்த தமிழக அரசியல் கட்சிகளும் உற்று நோக்கி கவனித்து வருகிறது.
மேலும் நடிகர் விஜய் தன்னுடைய அரசியல் கட்சியின் கொள்கைகள் மற்றும் 2026 தேர்தல் தொடர்பாக பல்வேறு அறிவிப்புகளை வெளியிட இருக்கும் நிலையில் மாலை 6 மணியளவில் தன் பேச்சை தொடங்குவார் என்று கூறப்படுகிறது. கிட்டத்தட்ட 2 மணி நேரம் வரை விஜய் பேச திட்டமிட்டுள்ளாராம். இன்று மாநாடு நடைபெறும் நிலையில் நேற்று இரவு விக்கிரவாண்டிக்கு விஜய் சென்று விட்டார்.அங்கு மாநாட்டுக்கான பணிகளை நேரில் ஆய்வு செய்த அவர் பின்னர் தமிழக வெற்றி கழகத்தின் நிர்வாகிகளுடன் ஆலோசனைக் கூட்டமும் நடத்தினார்.