ஒவ்வொரு ஆண்டும் உலக அளவில் பல லட்சம் பெண்கள் மார்பக புற்று நோயினால் பாதிக்கப்பட்டு வருகின்றனர். இது பற்றி போதிய விழிப்புணர்வு பெண்களிடம் இல்லாத காரணமாகும். பெண்களிடம் ஏற்படும் மார்பக புற்றுநோய் பற்றி விழிப்புணர்வை அக்டோபர் மாதம் பிங்க் மாதமாக ஹர்ஷமித்ரா மருத்துவமனையில் கடைப்பிடித்து வருகிறது. இந்த வருடம் திருச்சி நாகமங்கலத்தில் உள்ள ஹர்ஷமித்ரா மருத்துவமனை புற்றுநோய் மற்றும் மல்டி ஸ்பெஷாலிட்டி மற்றும் ரோஸ் கார்டன் இணைந்து மார்பக புற்றுநோயிலிருந்து குணம் அடைந்தவர்கள் சந்திப்பு நிகழ்ச்சி நடைபெற்றது.
இந்நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக தனலட்சுமி சீனிவாசன் பல்கலைக்கழக முதல்வரும் மற்றும் அறுவை சிகிச்சை நிபுணருமான துளசி கலந்து கொண்டார். மணப்பாறை பாலாஜி மருத்துவமனை நிர்வாக இயக்குனரும், மகப்பேறு சிறப்பு மருத்துவரான மென் மொழி,செர்வைட் செவிலியர் கல்லூரி செயலாளர் சகாயமேரி ஆகியோர் முன்னிலை விருந்தினராக கலந்து கொண்டனர். கெளரவ அழைப்பாளராக கலந்து கொண்ட நடிகையும், டப்பிங் கலைஞர் நித்யா ரவீந்திரன் கலந்து சிறப்புரை ஆற்றினார். இதில் 50 க்கும் மேற்பட்ட கலந்து கொண்ட பெண்கள் மார்பக புற்றுநோய் பற்றிய சந்தேகங்களை கேட்டு அறிந்தனர்.இந்த மருத்துவமனையில் பிங்க் அக்டோபர் மாதத்தில் மார்பக புற்றுநோயை ஆரம்ப கட்டத்தில் தடுக்கும் வகையில் மூன்று வகையான கிராம் சிகிச்சைக்கு ரூ 999/- சிறப்பு விலையில் சிகிச்சை அளிக்கப்படுகிறது என்று நிர்வாக இயக்குனர் கோவிந்தராஜ் கூறினார். நிகழ்ச்சி முடிவில் செயல் இயக்குனரும், மருத்துவர் சசிப்ரியா கோவிந்தராஜ் நன்றி கூறினார். இதற்கான ஏற்பாடுகளை மருத்துவ ஊழியர்கள் செய்து இருந்தனர்.