திருவெறும்பூர் அரசு கல்லூரியில் மது அருந்தி மாணவர்களை மிரட்டிய போதை ஆசாமிகள் கைது!
திருச்சி திருவெறும்பூர் ஐடிஐ பார் மற்றும் அண்ணா வளைவு டாஸ்மாக் கடையை அகற்ற கோரி இந்திய மாணவர் சங்கத்தின் தலைமையில் மாணவர்கள் தொடர் போராட்டத்தை அறிவித்து போராட்டம் நடைபெற்று வருகிறது. மாணவர்கள் கல்லூரிக்கு வருவதற்கு முன்பே கல்லூரிக்கு சம்மந்தம் இல்லாத மூன்று நபர்கள் கல்லூரிக்குள் புகுந்து மது அருந்திவிட்டு அங்கு படிக்க கூடிய மாணவர்களிடம் தகாத வார்த்தையால் பேசியதை தட்டிக்கேட்க சென்ற கிளை துணை செயலாளர் துளசி ராமை மாவட்ட தலைவர் வைரவளவனை தகாத வார்த்தையால் பேசி தாக்க முற்பட்டனர்.
இது சம்பந்தமாக காவல்துறை கட்டுப்பாட்டு அறைக்கு இந்திய மாணவர் சங்கத்தின் மாநில இணைச் செயலாளர் ஜி.கே.மோகன் புகார் அளித்தனர். துவாக்குடி காவல் துறையினர் சம்பவ இடத்திற்கு வந்து விசாரணை செய்தனர். மாவட்ட தலைவர் வைரவளவன் ரஞ்சித், ராஜன், கார்த்தி ஆகியோர் மீது நடவடிக்கை எடுக்க கோரி காவல் நிலையத்தில் புகார் கொடுத்தார்.புகாரின் அடிப்படையில் வழக்கு பதிவு செய்து கைது செய்ய திருவெறும்பூர் DSP ஜாபர் சித்திக் உத்தரவிட்டார்