தென்காசி மாவட்ட சேர்ந்தமரம் அரசு ஆரம்ப சுகாதார நிலையம் சார்பாக வரும்முன் காப்போம் சிறப்பு மருத்துவ முகாம்!
தென்காசி மாவட்ட சுகாதார அலுவலர் உத்தரவின்படி, தென்காசி மாவட்டம் மேலநீலிதநல்லூர் வட்டாரம் சேர்ந்தமரம் அரசு ஆரம்ப சுகாதார நிலையம் சார்பாக குலசேகரமங்கலம் பஞ்.யூனியன் நடுநிலைப் பள்ளி வளாகத்தில் வைத்து கலைஞரின் நடைபெற்றது. இம்முகாமில் குலசேகரமங்கலம் ஊராட்சி மன்ற தலைவர் வெள்ளத்துரை தலைமை வகித்தார்.மேலநீலிதநல்லூர் ஒன்றிய கவுன்சிலர் முத்துமாரி மற்றும் ஊராட்சி மன்ற துணைத் தலைவர் சக்திவேல் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
வட்டார மருத்துவ அலுவலர் புரோஸ்கான் தலைமையில் சிறப்பு மருத்துவர்கள் மற்றும் அனைத்து சுகாதார பணியாளர்கள், கலந்து கொண்டு இலவசமாக அனைத்து நோயாளிகளுக்கும் பரிசோதனை செய்து மருந்துகள் வழங்கினர் கர்ப்பிணித் தாய்மார்களுக்கு ஸ்கேன் பரிசோதனைகள் செய்து, சிகிச்சைகள் வழங்கப்பட்டது.நடமாடும் டிஜிட்டல் எக்ஸ் ரே உதவியுடன் சளி அறிகுறி உள்ள 59 நபர்களுக்கு எக்ஸ்ரே எடுக்கப்பட்டு உயர் சிகிச்சை வழங்கபட்டது.
இதில் சேர்ந்தமரம் நிலைய மருத்துவ மேற்பார்வையாளர் முருகன், வட்டார சுகாதார மேற்பார்வையாளர்(பொ) சுப்பையா, சுகாதார ஆய்வாளர்கள், செல்வகிருஷ்னண், பாலசுந்தரம், ஜெயராம், சுகுமார், விக்னேஷ், சுரேஷ், கிராம செவிலியர்கள், பகுதி நேர சுகாதார செவிலியர்கள், சமுதாய சுகாதார செவிலியர், மற்றும் சுகாதார பணியாளர்கள் கலந்து கொண்டார்கள்.