சிறுகமணி வேளாண்மை அறிவியல் நிலையத்தில்அப்துல் கலாம் பிறந்தநாளை முன்னிட்டு மரக்கன்று நடப்பட்டது!
தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் கீழ் இயங்கும் திருச்சி மாவட்டம், சிறுகமணி வேளாண்மை அறிவியல் நிலையம் மூலம் விவசாயிகளுக்கு பல்வேறு வேளாண் சார்ந்த பயிற்சிகள், செயல்முறை விளக்கங்கள் மற்றும் விழிப்புணர்வு நிகழ்வுகள் வழங்கப்பட்டு வருகிறது. இதன் ஒரு பகுதியாக, விண்வெளி நாயகன் குடியரசு தலைவர் பாரத ரத்னா டாக்டர் ஏ.பி.ஜே அப்துல் கலாம் 93வது பிறந்த நாளை முன்னிட்டு சிறுகமணி வேளாண்மை அறிவியல் நிலையம் மூலம் விவசாயிகளுக்கு இலவச மரக்கன்றுகள் வழங்கப்பட்டன. மேலும் வேளாண் அறிவியல் நிலைய வளாகத்தில் விவசாயிகள் பயன்பெற மூலிகைத் தோட்டம் அமைக்கும் விதமாக திப்பிலி கன்று மற்றும் மரக்கன்று திட்ட ஒருங்கிணைப்பாளர் முனைவர் சி.ராஜா பாபு அவர்களின் தலைமையில் நடப்பட்டது.
இந்நிகழ்ச்சியில் வேளாண் அறிவியல் நிலைய தொழில் நுட்ப வல்லுநர்கள் முனைவர் ந. புனிதவதி, முனைவர் எம்.மாரிமுத்து முனைவர் சு.ஈஸ்வரன், முனைவர் த.ஜானகி மற்றும் அலுவலர்கள் ஆகியோர் பங்கு பெற்றனர்.