திருச்சி உறையூர் நகர் நல மையத்தில் நாளை (வியாழக்கிழமை) ஆண்களுக்கான நவீன கருத்தடை சிகிச்சை முகாம் நடைபெறுகிறது. ஆண்களுக்கான நவீன கருத்தடை சிகிச்சை செய்து கொள்பவர்களுக்கு ஊக்கத்தொகையாக ரூ.1,100-ம், அவரை ஊக்குவித்து அழைத்து வருபவருக்கு ரூ.200-ம் தமிழக அரசால் கொடுக்கப்படும். ஓரிரு நிமிடங்களில் மயக்கமருந்து கொடுக்காமல் செய்யப்படும் இந்த சிகிச்சைக்கு பின்பு, ஆஸ்பத்திரியில் தங்க வேண்டிய அவசியம் கிடையாது. சிகிச்சை முடிந்த பிறகு வீட்டிற்கு சென்றுவிடலாம். எனவே விருப்பம் உள்ள ஆண்கள் நவீன குடும்ப நல கருத்தடை செய்து பயன்பெறலாம் என்று மருத்துவம் மற்றும் ஊரக பணிகள் துணை இயக்குனர் (குடும்ப நலம்) டாக்டர் சாந்தி தெரிவித்துள்ளார்.