திருச்சி எக்விடாஸ் குருகுல பள்ளி உடற்பயிற்சி ஆசிரியரை நடவடிக்கை எடுக்க கோரி இந்திய மாணவர் சங்கத்தினர் போராட்டம்!

- Advertisement -

0

திருச்சி ஆயில் மில் சாலையில் உள்ள  எக்விடாஸ் குருகுல பள்ளியில் சுமார் ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவர்கள் படித்து வருகின்றனர்.அங்கு உடல் கல்வி ஆசிரியராக பணியாற்றக்கூடிய ராஜா என்பவர் மாணவர்கள் இடையே பாகுபாட்டினை உண்டாக்கக் கூடிய விதத்தில் நடந்து கொண்டதாகவும், தேசிய அளவில் வெற்றி பெற்ற மாணவர்களை உளவியல் ரீதியாக மாணவர்களை மற்ற மாணவர்களிடமிருந்து தனிமைப்படுத்தியதாகவும், மாவட்ட அளவிலான போட்டிகளில் திட்டமிட்டு ஒரு சில மாணவர்களை புறக்கணிப்பதாக கூறி இந்திய மாணவர் சங்கத்தினர் திருச்சி ஆயில் மில் எக்விடாஸ் குருகுல பள்ளியினை முற்றுகையிட்டு போராட்டம் நடத்துவதாக அறிவித்தனர்.

- Advertisement -

அதன் அடிப்படையில் அரியமங்கலம் காவல் ஆய்வாளர் ரமேஷ் பள்ளி நிர்வாகத்தினர் மாணவர் சங்கத்தினரையும் அழைத்து எக்விடாஸ் பள்ளியில் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டார் பேச்சுவார்த்தையில் பெற்றோர்களை தவிர போராட்டக்காரர்களிடம் பள்ளி நிர்வாகம் பேச தயாராக இல்லாத நிலையில் இந்திய மாணவர் சங்கத்தினர் திட்டமிட்டபடி பள்ளி முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது தமிழக அரசு உடனடியாக உடற்கல்வி ஆசிரியர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் கோஷங்களை எழுப்பினர். அடுத்த கட்ட போராட்டம் அக்டோபர் 23ஆம் தேதி நடத்த போவதாக இந்திய மாணவர் சங்கத்தினர் அறிவித்தனர். இந்த போராட்டத்தில் இந்திய மாணவர் சங்கத்தின் மாவட்ட தலைவர் சூர்யா தலைமை வகித்தார். மாவட்ட செயலாளர் ஜி.கே மோகன் உள்ளிட்ட கல்லூரி மாணவர்கள் திரளாக பங்கேற்றனர்

Leave A Reply

Your email address will not be published.