தூத்துக்குடி மாவட்டம், ஆத்தூர் தேர்வு நிலை பேரூராட்சிக்கு உட்பட்ட அரசு மேல்நிலைப் பள்ளியில் தமிழக அரசின் சார்பில் வழங்கப்பட்டுள்ள 30 இலவச மிதிவண்டியினை பேரூராட்சி மன்ற தலைவர் AK. கமால்தீன் மாணவ மாணவியர்களுக்கு வழங்கினார். நிகழ்வில் திமுக ஆத்தூர் பேரூர் கழகச் செயலாளர் MP.முருகானந்தம் மற்றும் பேரூராட்சி மன்ற கவுன்சிலர்கள் பாலசிங் , அசோக் குமார் , முத்து ஆகியோர்கள் முன்னிலை வகித்தனர். இந்த நிகழ்வில் பள்ளியின் தலைமை ஆசிரியர், முன்னாள் மாணவர் சங்க செயலாளர் புகாரி,ஆசிரிய பெருமக்கள் மற்றும் மாணவ மாணவிகள் கலந்து கொண்டனர்.