வடகிழக்கு பருவமழை காரணமாக திருச்சி மாவட்டத்தில் மழை பாதிப்பு புகார் அளிக்க எண்கள் அறிவிப்பு!
திருச்சி மாவட்டத்தில் வடகிழக்கு பருவமழை காரணமாக முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அதன் ஒரு பகுதியாக, மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வருவாய்த்துறை, காவல்துறை, தீயணைப்புத்துறை, மீட்புப் பணித்துறை, ஊரக வளர்ச்சி, பேரூராட்சி மற்றும் நெடுஞ்சாலைதுறை ஆகிய அலுவலர்கள் நியமிக்கப்பட்டு, 24 மணி நேர மாவட்ட கட்டுபாட்டு அறை செயல்பட்டு வருகிறது. பருவமழை குறித்து மாவட்ட ஆட்சியர் பிரதீப் குமார் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.
புகார் எண் அறிக்கையில், “1077, 0431-2418995 என்ற கட்டணமில்லா எண்ணைத் தொடர்பு கொண்டு, மழை பாதிப்பு தொடர்பான புகாரை அளிக்கலாம். தொடர்ந்து 93840 56213 என்ற வாட்ஸ்அப் எண்ணிலும் புகார் அளிக்கலாம். மேலும், வட்ட அலுலகங்களிலும் 24 மணி நேர கட்டுபாட்டு அறை செயல்பட்டு வருகிறது.