விஜயதசமியை முன்னிட்டு பச்சை அரிசியில் எழுத வைத்து பள்ளிகளில் குழந்தைகளை சேர்க்கை நிகழ்ச்சி!
திருச்சி எடமலைப்பட்டி புதூர் அரசு தொடக்கப்பள்ளியில் விஜய தசமியை முன்னிட்டு பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளை 2024-2025 ஆம் ஆண்டுக்கான சேர்க்கை நிகழ்ச்சியில் 57 வது வார்டு கவுன்சிலர் முத்துச்செல்வம் தன் மடியில் குழந்தையை அமர வைத்து நெல்லில் எழுத வைத்தார். பிறகு பச்சை அரிசியில் ‘அ’ என்ற எழுத்தை எழுத வைத்தார். கல்வி அலுவலர் ஜெயலட்சுமி, தொடக்கப்பள்ளி தலைமை ஆசிரியர் புஷ்பலதா, உயர்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் புஷ்பவல்லி மற்றும் பெற்றோர்கள்,குழந்தைகள் ஏராளமான கலந்து கொண்டனர்.
அதே போல் கிராப்பட்டியில் உள்ள செல்லமாள் மெட்ரிக் உயர்நிலை பள்ளியிலும், எடமலைபட்டி புதூர் உள்ள இன்பண்ட ஜீசஸ் தனியார் மெட்ரிக் உயர்நிலை பள்ளியிலும் 2024-2025 ஆம் ஆண்டுக்கான குழந்தைகளை சேர்க்கை நிகழ்ச்சியில் பச்சை அரிசியில் ‘அ ‘என்ற எழுத்தை எழுத வைத்தனர் .இதில் ஆசிரியர்கள் மற்றும் பெற்றோர்களும் கலந்து கொண்டனர்.