தனது பெயரில் பேஸ்புக்கில் போலி கணக்கு தொடங்கி பணமோசடி விளம்பரம்: பாடகி சித்ரா எச்சரிக்கை!

- Advertisement -

0

பிரபல பின்னணி பாடகி கே.எஸ்.சித்ரா, பல்வேறு மொழிகளில் 25 ஆயிரம் பாடல்களுக்கு மேல் பாடியுள்ளார். இவர், தனது பெயரில் பேஸ்புக்கில் போலி கணக்கு தொடங்கி மர்ம நபர்கள் பணமோசடி விளம்பரம் செய்துள்ளதாகவும் அவர்களிடம் எச்சரிக்கையாக இருக்குமாறும் கேட்டுக்கொண்டுள்ளார். பாடகி சித்ரா பெயரில் உருவாக்கப்பட்டுள்ள போலி கணக்கில், ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் லிமிடெட் நிறுவனத்தின் தூதராக இருக்கிறேன்.

- Advertisement -

இதில் ரூ.10 ஆயிரம் டெபாசிட் செய்து பங்குகளைப் பெற்றால் அதன் மதிப்பு ஒரு வாரத்தில் ரூ.50 ஆயிரம் வரை உயரும் என்றும் சித்ரா கூறுவது போல பதிவிட்டுள்ளனர். மேலும் சித்ராவின் ரசிகர்களுக்கு ஐபோனை பரிசாகத் தருவதாகவும் தெரிவித்துள்ளனர். இந்த விளம்பரம் குறித்து தனது நண்பர்கள் மூலம் அறிந்த சித்ரா, இது தன் பெயரைப் பயன்படுத்தி நடக்கும் மோசடி என்றும், இதில் யாரும் ஏமாற வேண்டாம் என்றும் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

Leave A Reply

Your email address will not be published.