தியாகி இமானுவேல் சேகரன் பிறந்த நாளை முன்னிட்டு படத்திற்கு அமைச்சர் கே.என்.நேரு மலர் தூவி மரியாதை!
ஒடுக்கப்பட்டோரின் உரிமைக்குரலாக ஒலித்த தியாகி இமானுவேல் சேகரின் பிறந்த நாளை முன்னிட்டு திருச்சி தில்லைநகர் திமுக அலுவலகத்தில் நகராட்சி நிர்வாக துறை அமைச்சர் கே.என்.நேரு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. இந்த நிகழ்வில் மத்திய மாவட்ட செயலாளர் வைரமணி, மாநகர செயலாளர் மேயர் அன்பழகன்,மத்திய மாவட்ட முன்னாள் துணைச் செயலாளர் குடமுருட்டி சேகர், மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் ஆனந்த், பகுதி செயலாளர் காஜாமலை விஜய்,அந்தநல்லூர் ஒன்றிய சேர்மன் துரைராஜ் பொதுக்குழு உறுப்பினர் கிராப்பட்டி செல்வம், புத்தூர் தர்மராஜ், ஸ்ரீரங்கம் பகுதி செயலாளர் ராம்குமார், கழக நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்துகொண்டனர்.