திருச்சி ஜமால் முகமது கல்லூரியில் பெண்கள் பிரிவு சங்கத்தின் சார்பில் மாணவி களுக்கான விழிப்புணர்வு நிகழ்ச்சி!
திருச்சி ஜமால் முகமது கல்லூரி சுயநிதி பெண்கள் பிரிவு இளையோர் செஞ்சிலுவைச் சங்கம் மற்றும் இளஞ்சுருள் சங்கத்தின் சார்பில் மாணவிகளுக் கான விழிப்புணர்வு நடைபெற்றது. இந்நிகழ்வில் சிறப்பு விருந்தினராக ஹர்ஷமித்ரா மருத்துவமனையின் மருத்துவர் பி.சசிப்பிரியா கோவிந்தராஜ் கலந்து கொண்டு பெண்களுக்கு ஏற்படும் மார்பகப் புற்றுநோய் குறித்த கருத்துக்களை மாணவிகளிடையே விளக்கமாக எடுத்துரைத்தார்.முன்னதாக கல்லூரி முதல்வர் முனைவர் து.இ ஜார்ஜ் அமலரத்தினம் தலைமை உரையாற்றினார். இளையோர் செஞ்சிலுவைச்சங்க ஒருங்கிணைப்பாளர் சி.மனோசித்ரா வரவேற்புரை வழங்கினார்.
இந்நிகழ்வில் கல்லூரி செயலர் மற்றும் தாளாளர் ஹாஜி டாக்டர் அ.கா. காஜா நஜிமுதீன்,பொருளாளர் ஹாஜி எம்.ஜே. ஜமால் முகமது உதவிச் செயலாளர் முனைவர் கே. அப்துஸ் சமது,ஆட்சி மன்றக்குழு உறுப்பினர் மற்றும் கௌரவ இயக்குநர் முனைவர் கே.என். அப்துல்காதர் நிஹால்,துணை முதல்வர் முனைவர்ஆர். ஜாஹிர் உசேன்,கூடுதல் துணை முதல்வர்கள் முனைவர் ஏ. இஷாக் அகமது,முனைவர் ஏ.ஜே. ஹாஜா மொஹிதீன்,செல்விஏ.பஃமிதாபானு,விடுதி நிர்வாக இயக்குனர்ஹாஜி முனைவர் கா.ந.முகமது பாசில், பெண்கள் விடுதி இயக்குநர் செல்வி ஜெ. ஹாஜிரா பாத்திமா,பகுதி 5 பெண்கள் பிரிவு ஒருங்கிணைப் பாளர் முனைவர் மு.ஹ.ஜஹானாரா,ஆகியோர் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.இறுதியாகஇளஞ்சுருள் சங்க ஒருங்கிணைப்பாளர் முனைவர் அ.சம்சாத் பேகம் நன்றி கூறினார்.