உலக பருத்தி தினத்தை முன்னிட்டு பருத்தி பிளஸ் என்னும் பூஸ்டர் குறித்து விவசாயிகளிடையே விழிப்புணர்வு நிகழ்ச்சி!

- Advertisement -

0
உலக பருத்தி தினத்தை முன்னிட்டு பருத்தியில் அதிக மகசூல் பெற சிறுகமணி வேளாண்மை அறிவியல் நிலையம் மூலம் களத்தூர் கிராமம் தொட்டியம் வட்டாரத்தில் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது.நம் நாட்டின் வேளாண் உற்பத்தி மற்றும் நெய்தல் தொழிலில் பருத்தியின் முக்கியத்துவத்தை உணர்த்து வதற்காக உலக பருத்தி  தினம் கொண்டாடப்பட்டது. இத்தினத்தை முன்னிட்டு பருத்தியின் முக்கியத்துவம் மற்றும் அதன் சாகுபடி தொழில்நுட்பங்களை விவசாயிகளிடையே எடுத்துரைக்கும் நோக்கில்  களத்தூர் கிராமம் தொட்டியம் வட்டாரத்தில் சிறுகமணி வேளாண்மை அறிவியல் நிலையம் மற்றும் வேளாண்மை துறை, தொட்டியம் வட்டாரம் சார்பில் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடத்தப்பட்டது.
இந்நிகழ்ச்சியில் வேளாண்மை அறிவியல் நிலைய திட்ட ஒருங்கிணைப்பாளர் முனைவர் சி.ராஜா பாபு அவர்கள் பருத்தியில் அதிக மகசூல் பெற, பூக்கள் மற்றும் சப்பைகள் உதிர்வதை காய்கள் முழுமையாக வெடித்து சீரான அறுவடைக்கு வழிவகுக்கும் தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகத்தின் பருத்தி பிளஸ் (பருத்திக்குத் தேவையான ஊட்டச்சத்துக்கள் மற்றும் வளர்ச்சிக்குகள் கலந்த பூஸ்டர்) குறித்து விவசாயிகளிடையே எடுத்துரைத்தார்.  பருத்தியில் பூ மற்றும் சர்பை கொட்டுதலை தவிர்க்க தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகத்தின் பயிர் வினையியல் துறையின் மூலம் பருத்தி பிளஸ் என்னும் பூஸ்டர் வெளியிடப் பட்டுள்ளது. இந்த பூஸ்டரை 2.5 கிலோ என்ற வீதம் பூக்கும் மற்றும் காய் பிடிக்கும் பருவத்தில் 200 லிட்டர் தண்ணீரில் ஒட்டும் திரவம் கலந்து தெளிக்க வேண்டும். இந்த பூஸ்டரை இலை தெளிப்பாக தெளிப்பதன் மூலம் பூ மற்றும் சப்பை கொட்டுதல் தவிர்க்கலாம். இதன் மூலம் காய்கள் முழுமையாக வெடித்து சீரான அறுவடைக்கு வழி வகுக்கிறது. இது வறட்சியை தாங்கும் தன்மையை அதிகரிக்கிறது. மேலும் விளைச்சல் 18 சதம் வரை அதிகரிக்கிறது.

- Advertisement -

 இந்நிகழ்ச்சியில் இணை பேராசிரியர் முனைவர் மு.சகிலா  பருத்தியில் நவீன ரகங்கள் மற்றும் அதன் சிறப்பியல்புகள் குறித்து விளக்கினார். தொட்டியம் வட்டார உதவி வேளாண் இயக்குனர் சௌந்தரராஜன்  பருத்தியில் அதிக மகசூலுக்கான தொழில்நுட்பங்கள் குறித்து எடுத்துரைத்தார். மேலும் இந்நிகழ்ச்சியில் வேளாண் துணை அலுவலர் திரு.பரந்தாமன், வேளாண்மை அறிவியல் நிலையையே இணை பேராசிரியர்கள் முனைவர் சு.ஈஸ்வரன் மற்றும் முனைவர் எம். மாரிமுத்து ஆகியோர் கலந்து கொண்டனர்.
Leave A Reply

Your email address will not be published.