மாணவர்கள் தண்ணீர் மற்றும் சோப்பு பயன்படுத்தி கை கழுவ மாபெரும் பிரச்சாரம்: கிராமாலயா தொண்டு நிறுவனம் ஏற்பாடு!
உலகளாவிய கை கழுவுதல் தினத்தை முன்னிட்டு அக்டோபர் 2 முதல் அக்டோபர் 31 வரை ஒரு கோடி மாணவர்கள் தண்ணீர் மற்றும் சோப்பு பயன்படுத்தி கை கழுவ மாபெரும் பிரச்சாரத்தை கிராமாலயா தொண்டு நிறுவனம் பள்ளி மாணவர்களுக்காக அகில இந்திய அளவில் ஏற்பாடு செய்துள்ளது.பத்மஸ்ரீ தாமோதரன் பிரச்சார துண்டு பிரசுரங்களை அமிர்தம் சமூக சேவை அறக்கட்டளை நிர்வாக அறங்காவலர் யோகா ஆசிரியர் விஜயகுமார், திருச்சி மேல கல்கண்டார் கோட்டை அரசு உயர்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் சற்குணன் பெரம்பலூர் தனலட்சுமி சீனிவாசன் தன்னாட்சி கல்லூரி மேலாண்மைத் துறை இயக்குனர் முனைவர் சந்திரசேகரன் உள்ளிட்டோருக்கு வழங்கினார்.
சோப்பு மற்றும் தண்ணீரில் கைகளை கழுவுவது கிருமிகள் பரவுவதைத் தடுக்கவும் ஆரோக்கியமாக இருக்க பயனுள்ள வழிகளில் ஒன்றாகும். கைகளை சுத்தமாக வைத்திருப்பது வயிற்றுப்போக்கு நோய்கள் மற்றும் ஜலதோஷம் அல்லது காய்ச்சல் போன்ற சுவாச நோய்த்தொற்றுகளைத் தடுக்க உதவும். கைகளைக் கழுவாதபோது, மக்களை நோய்வாய்ப்படுத்தும் பல கிருமிகள் பரவுகின்றன. சோப்பு மற்றும் தண்ணீரில் கை கழுவுதல் எளிமையானது மற்றும் மலிவானது, மேலும் இது நோய்வாய்ப்படும் சிறு குழந்தைகளின் எண்ணிக்கையை கணிசமாகக் குறைக்கும் . கை கழுவுதல் பற்றி மக்களுக்குக் கற்றுக் கொடுப்பது அவர்களுக்கும் அவர்களின் சமூகங்களுக்கும் ஆரோக்கியமாக இருக்க உதவுகிறது. பள்ளியில் பயிலும் ஒரு கோடி மாணவர்கள் சோப்பு மற்றும் தண்ணீர் பயன்படுத்தி கை கழுவ ஊக்கப்படுத்த 18001236848 எண்ணிற்கு மிஸ்டு கால் கொடுக்க வேண்டும் வாட்ஸ் அப்பில் பதிவு செய்வதற்கான இணையதள லிங்க் பெறுவீர்கள். லிங்கை கிளிக் செய்து பதிவு செய்ய வேண்டும் மாணவர்கள் கை கழுவும் நிகழ்வில் பங்கேற்க சோப்பு தண்ணீருடன் கைகளை கழுவும் புகைப்படம் எடுத்து பதிவேற்றவும். பதிவேற்றியவுடன் சுகாதார நிகழ்வில் பங்கேற்றதற்கான டிஜிட்டல் சான்றிதழை பெற்றுக் கொள்ளலாம் .