லால்குடியில் ரூ.4¼ கோடியில் புதிய நகராட்சி அலுவலக கட்டிட பணிகள்தொடக்க விழா: அமைச்சர் கே.என்.நேரு பங்கேற்பு!!
லால்குடியில் 6வது மானிய சிறப்பு நிதி திட்டத்தின் கீழ் பூவாளூர் சாலையில் ரூ.4 கோடியே 27 லட்சம் மதிப்பீட்டில் புதிய நகராட்சி அலுவலகம் கட்டும் பணிக்கான அடிக்கல் நாட்டு விழா நடைபெற்றது. விழாவிற்கு மாவட்ட கலெக்டர் பிரதீப்குமார் தலைமை தாங்கினார். சவுந்தர பாண்டியன், நகர்மன்ற தலைவர் துரைமா–ணிக்கம், நகராட்சி மண்டல இயக்குனர் தாணுமூர்த்தி, நகராட்சி ஆணையர் குமார், நகராட்சி பொறியாளர் வெங்கட்ராமன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். விழாவில் நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே.என்.நேரு சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு புதிய நகராட்சி கட்டிடத்திற்கு அடிக்கல் நாட்டி கட்டிட பணிகளை தொடங்கி வைத்தார்.
இதில் மாநகராட்சி மேயர் அன்பழகன், மத்திய மாவட்ட தி.மு.க. செயலாளர் வைரமணி, ஒன்றியக்குழு தலைவர் ரவிச்சந்திரன், ஒன்றிய செயலாளர்கள் சண்முகநாதன், சக்திவேல், பெரியய்யா, தாசில்தார் முருகன், மற்றும் நகராட்சி துணைத் தலைவர் சுகுணா ராஜ்–மோகன், நகர துணை தலைவர் இளங்கோவன், மணக்கால் சகாய அன்னை ஆலய உதவி பங்கு தந்தை ஜோ டேனியல், தொன் போஸ்கோ தொழில் பயிற்சி முதல்வர் ஜெஸ்டின், முன்னாள் நகர மன்ற உறுப்பினர்கள், உள்ளாட்சி பிரதிநிதிகள் மற்றும் கட்சி நிர்வாகிகள், நகராட்சி அலுவலர்கள், பணியாளர்கள், பொதுமக்கள் கலந்து கொண்டனர்.