திருச்சி திருவெறும்பூரில் இருந்து பெல்பூர், திருவேங்கடநகர் வரை செல்லும் ஒன்றிய சாலை ஐந்து வருடங்களாக பேட்ச் ஒர்க் மற்றும் எந்தவித சாலை பணியும் நடைபெறாமல் அப்படியே கிடைக்கிறது.மேலும் இந்த சாலை பல்லாங்குழி போல் காட்சி அளிக்கிறது.
குண்டும், குழியுமாக இந்த சாலையில் பொதுமக்கள் செல்வதால் அடிக்கடி விபத்து நடப்பதுடன் ஆஸ்பத்திரிக்கு செல்லும் அவல நிலை உருவாகியுள்ளது. இதனால் இந்த சாலையை பொதுமக்கள் பயன்படுத்த முடியாத நிலையில் உள்ளது.
எனவே உடனடியாக சாலையை புதுப்பித்து தரக்கோரி இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தின் சார்பாக நாற்று நடும் போராட்டம் மற்றும் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.இந்த ஆர்ப்பாட்டத்தில் திருவெறும்பூர் சுற்றியுள்ள பொதுமக்கள் மற்றும் இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தினரும் கலந்து கொண்டனர்.