மக்கள் நல்வாழ்வு சமூக பாதுகாப்பு அமைப்பின் சார்பில் பெண்களுக்கு இலவச சிறுதொழில் பயிற்சி முகாம்…!
திருச்சி மாவட்டம் திருவெறும்பூர் அருகில் உள்ள வ உ சி நகர் சமுதாயக்கூடத்தில் மக்கள் நல்வாழ்வு சமூக பாதுகாப்பு அமைப்பின் சார்பில் 60 பெண்களுக்கு இலவச சிறுதொழில் பயிற்சி முகாம் நடைபெற்றது. இப்பயிற்சி முகாமில் நிறுவனத் தலைவர் ராஜேஷ் தலைமை வகித்தார். சிறப்பு விருந்தினர்களாக மங்கையர்கரசி, திருவெறும்பூர் மகளிர் காவல் ஆய்வாளர் சின்னம்மா தேவராஜ், வாழவந்தான் ஊராட்சி மன்ற தலைவர் கோட்டை சுசில் குமார், தலைமை வணிக அதிகாரி சாருமதி, வழக்கறிஞர் மருதாம்பாள் ஆகியோர் கலந்து கொண்டனர்.
விழாவில் நிறுவன பொதுச் செயலாளர் ஆதிலட்சுமி ஆனந்தராஜு, மாநில ஆலோசகர் ராமன், பெஞ்சமின், மாநிலத் துணைத் தலைவர் தமிழ் இலக்கியா, மாநில மகளிர் அணி தலைவர் சுபா, மாநில மகளிர் அணி ஆலோசகர் சுமதி, மாநில மகளிர் அணி துணைத் தலைவர் ஜெயராணி, மாநில மகளிர் அணி செயலாளர் பானுமதி, துணைச் செயலாளர் தஸ்லீம், மாநில இளைஞர் அணி ஒருங்கிணைப்பாளர் ஜான், திருச்சி மாவட்ட தலைவர் அருண், திருச்சி மாவட்ட இளைஞரணி தலைவர் ராஜசேகர், மகளிர் திருச்சி மாவட்ட செயலாளர் திலகவதி, ரேவதி, மாவட்ட ஒருங்கிணைப்பாளர் சரவணன், மகளிர் ஒருங்கிணைப்பாளர் பழனியம்மாள் மற்றும் பலர் கலந்து கொண்டனர். முடிவில் விடிவெள்ளி பெண்கள் சுபா நன்றி கூறினார்.