இயற்கை விவசாயத்தை ஊக்குவிக்கும் வகையில் முதன்முறையாக இயற்கை வேளாண்மை உற்பத்தியாளர் மற்றும் நுகர்வோர்களுக்கான ஒருங்கிணைப்பு நிகழ்ச்சி…!
தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகத்தின் கீழ் இயங்கும் சிறுகமணி வேளாண்மை அறிவியல் நிலையம் மூலம் பல்வேறு பயிற்சிகள் மற்றும் விழிப்புணர்வு பல்வேறு பயிற்சிகள் மற்றும் விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகிறது.இயற்கை விவசாயத்தை ஊக்குவிக்கும் நோக்கில் இயற்கை விவசாயத்தில் விவசாயத்தில் ஈடுபடுபவர்கள்,இயற்கை இடுபொருட்களை தயாரிப்பவர்கள் மற்றும் சந்தைப்படுத்துபவர்களை ஒருங்கிணைத்து இயற்கை வேளாண்மை கருத்தரங்கு மற்றும் கண்காட்சி சிறுகமணி வேளாண்மை அறிவியல் நிலைய வளாகத்தில் நடைபெற்றது.இந்நிகழ்ச்சியில் இயற்கை உற்பத்தியாளர்களை ஊக்கப்படுத்தவும்,சந்தைப்படுத்துவதற்கான வாய்ப்புகளை அதிகரிக்கவும் இயற்கை வேளாண்மையில் விளைவித்த பொருள்களும், இயற்கை விவசாயத்தில் உபயோகப்படுத்தும் பொருட்களும் சந்தைப்படுத்தப்பட்டன. மேலும் இயற்கை வேளாண்மை குறித்தகருத்தரங்கு நடைபெற்றது.இந்நிகழ்ச்சியில் திருச்சி மாவட்டத்தின் பல்வேறு வட்டாரங்களில் இருந்தும் விவசாயிகள் மற்றும் உற்பத்தியாளர்கள் ஆர்வமுடன் பங்கு பெற்று பயனடைந்தனர்.
இந்நிகழ்ச்சியை தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழக விரிவாக்க கல்விஇயக்குனர் முனைவர்பி.பொ.முருகன் இணையவழியில் தலைமையுரையாற்றி துவக்கி வைத்தார். அவர் பேசுகையில்,மண்ணுயிர் காத்து மன்னுயிர்காப்போம் என்றதிட்டத்திற்கிணங்க இயற்கை வேளாண்மையை கடைபிடிப்பதன் மூலம் மண்ணின் வளத்தை பாதுகாக்க முடியும் என எடுத்துரைத்தார்.நம்மாழ்வார் இயற்கை வேளாண்மை ஆராய்ச்சி மைய பேராசிரியர் மற்றும் தலைவர் முனைவர்R.கிருஷ்ணன் தமிழ்நாடுவேளாண்மை பல்கலைக்கழகத்தின் மூலம் பல்வேறு ஆராய்ச்சிகள் மேற்கொள்ளப்பட்டு விவசாயிகளுக்கு வழங்கப்படும் இயற்கை இடு பொருட்களை பயன்படுத்துமாறு அறிவுறுத்தினார். வேளாண்மை அறிவியல்நிலைய திட்டஒருங்கிணைப்பாளர் முனைவர்சி.ராஜாபாபு நிகழ்ச்சியின் நோக்கம் குறித்து அறிமுக உரையாற்றினார்.இந்த நிகழ்ச்சியானது இயற்கை விவசாயத்தை ஊக்குவிப்பதோடு இயற்கை இடுபொருள் தயாரிப்பவர்களுக்கும், சந்தைப்படுத்துபவர்களுக்கும் பெரிதும் ஊக்கமாக அமையும் என விளக்கமளித்தார்.
கரும்பு ஆராய்ச்சி நிலைய பேராசிரியர் முனைவர் பூ.மாசிலாமணி விவசாயிகள் தாங்கள் தயாரித்த பொருள்களை சான்றுடன் விற்பனை செய்யுமாறு அறிவுறுத்தினார்.இந்த கருத்தரங்கில் பேராசிரியர் முனைவர்ந. புனிதவதி பாரம்பரிய விதைகளை பாதுகாப்பது எப்படி என்று எடுத்துரைத்தார். இணை பேராசிரியர்கள் முனைவர் எம்.மாரிமுத்து இயற்கை விவசாயமும்,ஆரோக்கியமும் என்றதலைப்பில் விவசாயிகளுக்கு விவரித்தார். முனைவர் மு.சகிலா இயற்கை விவசாயமும் வெப்பமயமாதலும் குறித்து விளக்கினார். முனைவர் த.ஜானகி இயற்கை விவசாயமும் மண்வள ஆரோக்கியமும் என்னும் தலைப்பில் எடுத்து ரைத்தார். உதவிபேராசிரியர் முனைவர் இரா.ஷீபாஜாஸ்மின் உயிர்பூச்சிநோய் கொல்லியும், சுற்றுப்புறசூழ்நிலையும் என்பது குறித்து விவசாயிகளுக்கு விவரித்தார். இந்நிகழ்ச்சியில் திருச்சி மாவட்டத்தை சேர்ந்த இயற்கை விவசாயிகள் தங்கள் கருத்துக்களை பகிர்ந்துகொண்டனர்.திருச்சி மாவட்டத்தின் பல்வேறு வட்டாரங்களில் இருந்து 65 விவசாயிகள் பங்குபெற்று பயனடைந்தனர்.அடுத்த மாதத்திற்கான பயிற்சி 05.11.2024 செவ்வாய்க்கிழமை நடைபெறும். .மேலும் விவரங்களுக்கு திட்ட ஒருங்கிணைப்பாளர்,வேளாண்மைஅறிவியல்நிலையம்,சிறுகமணி ,தொலைபேசிஎண் – 0431-2962854 / 9171717832 அலுவலக நேரத்தில் தொடர்புகொள்ளவும். ( காலை 9 மணிமுதல்மாலை 5 மணிவரை) மேற்கண்ட தகவல்களை வேளாண்மை அறிவியல் நிலைய திட்ட ஒருங்கிணைப்பாளர் முனைவர்சி.ராஜாபாபுதெரிவிவித்தார்.