திருச்சியில் சிவாஜி கணேசன் பிறந்த தினத்தை முன்னிட்டு மன்றம் சார்பில் மலர் தூவி மரியாதை…!
நடிகர் திலகம் செவாலியர் சிவாஜி கணேசன் அவர்களின் பிறந்த தினத்தை முன்னிட்டு சிவாஜி மன்றம் சார்பில் பீமநகர் நாராயணசாமி தலைமையில் திருச்சி மார்க்கெட் ராமகிருஷ்ணா தியேட்டர் மந்தையில் அவரது உருவப்படத்திற்கு சிறப்பு அழைப்பாளராக தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி மாநில பொதுச்செயலாளர் வழக்குரைஞர் எம் சரவணன் கலந்துகொண்டு மலர் தூவி மரியாதை செலுத்தினார்.இந்நிகழ்வில் மாநில பேச்சாளர் சிவாஜி சண்முகம் உறந்தை செல்வம் ஆத்தா மாதவன் சோனா ராமநாதன் செங்கல் மணி மார்க்கெட் மாரியப்பன் பஜார் மைதீன் நிர்மல்குமார் அரிசி கடை டேவிட் பிரபு கும்கி குமார் கொத்தனார் சேகர் முசிறி கனக சபாபதி மற்றும் பலர் கலந்து கொண்டு மரியாதை செலுத்தினர்.