தேசிய மகளிர் ஆணைய உறுப்பினர் பதவியை குஷ்பு திடீரென ராஜினாமா செய்துள்ளார். குஷ்புவின் ராஜினாமாவை குழந்தைகள் மற்றும் பெண்கள் நலத்துறை ஏற்றுக்கொண்டுள்ளது. 2023 பிப்ரவரியில் தேசிய மகளிர் ஆணைய உறுப்பினராக குஷ்பு நியமிக்கப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது. 2010ல் திமுகவில் இருந்த குஷ்பு 2014ல் காங்கிரஸ் கட்சியில் சேர்ந்தார். பின்னர் காங்கிரஸில் இருந்து விலகிய குஷ்பு 2020-இல் பாஜகவில் இணைந்தார்.
குஷ்பு 2021 சட்டமன்றத் தேர்தலில் ஆயிரம் விளக்கு தொகுதியில் போட்டியிட்டு தோல்வியடைந்தார். பின்னர் குஷ்புவுக்கு பாஜக தேசிய செயற்குழு உறுப்பினர் பதவி வழங்கப்பட்டது. இதைத் தொடர்ந்து, 2023 பிப்ரவரியில், குஷ்பு தேசிய மகளிர் ஆணையத்தின் உறுப்பினராக நியமிக்கப்பட்டார்.தற்போது அப்பதவியை ராஜினாமா செய்துள்ளார்.